சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஜாக்ரதை".. விஜயகாந்த் வீசிய வெடி.. கோட்டைக்கு பறந்த முக்கிய வேண்டுகோள்.. தேமுதிகவின் "அலர்ட்"

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: புதிய வகை கொரோனா உருவெடுத்து, உலகமெங்கும் பரவி கொண்டிருக்கும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அத்துடன் தமிழக அரசுக்கும் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

கொஞ்சம் ஓய்ந்திருந்த தொற்று பரவல் மறுபடியும், சீனாவில் வேகமாக அதிகரித்து வருகிறது.. உயிரிழப்பும் அதிகமாகி கொண்டிருக்கிறது.. இது மற்ற நாடுகளுக்கும் பரவி கொண்டிருக்கிறது.

உருமாறிய கொரோனா BF.7 வகை பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல்..ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்..தேவஸ்தானம் அறிவிப்பு கொரோனா பரவல்..ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்..தேவஸ்தானம் அறிவிப்பு

ஆக்ஸிஜன்

ஆக்ஸிஜன்

மேலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நிலைமையை மதிப்பாய்வு செய்ததில், கொரோனா இன்னும் முடிவடையவில்லை, விழிப்புடன் இருக்கவும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.. இதையடுத்து நம் தமிழக அரசும் அலர்ட் ஆகி உள்ளது.. தமிழக சுகாதாரத்துறை ஒரு செய்திக்குறிப்பையும் வெளியிட்டிருந்தது. அதில், "அடுத்த 6 மாதங்களுக்கு சோதனை தேவையை மதிப்பிடுவதற்கும், மாதிரி சோதனைக் கருவிகளை முன்கூட்டியே வாங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் செறிவூட்டிகளை உயிரியல் மருத்துவ பொறியாளர்கள் சரிபார்க்க வேண்டும்.

 அலை அலையாய்

அலை அலையாய்

ஆக்சிஜன் சிலிண்டர்களை அவசரகால பயன்பாட்டிற்கு தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும், N95 முகக்கவசம், பிபிஇ கிட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும், மருந்துகளையும் மதிப்பீடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி மையம் முழு வீச்சில் செயல்பட வேண்டும். கொரோனா வார்டுகளில் கூடுதலாக படுக்கைகளின் இருப்பு வைத்திருக்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 3 வேவ்ஸ்

3 வேவ்ஸ்

இதைதவிர, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக்கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனையை வழங்கியிருந்தன.. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "சீனாவில் கடந்த 2020ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டி படைத்தது. லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இந்தியாவில் 3 அலைகளாக மிரட்டிய கொரோனா வைரஸால் வைரசால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் முடங்கியது.

 சகஜம்

சகஜம்

கொரோனாவில் இருந்து மீண்டு உலக மக்கள் சகஜ நிலைக்கு படிப்படியாக திரும்பி வரும் நிலையில் சீனாவில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் சிலரை பாதித்து இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என எச்சரிக்கப்பட்டு உள்ளதால் பொது மக்களும் அலட்சிய போக்குடன் இல்லாமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

 கவனம் கவனம்

கவனம் கவனம்

தற்போது புத்தாண்டு போன்ற பண்டிகைகள் வருவதால் பொது மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பண்டிகைகளை தங்களுடைய குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும். மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை தவிர பொது மக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்வது போன்ற கொரோனா வழிக்காட்டு முறைகளை மீண்டும் நடை முறைப்படுத்த தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 டிப்ஸ் ராமதாஸ்

டிப்ஸ் ராமதாஸ்


பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் சமீப நாட்களாகவே, பொதுமக்களையும் அரசையும் அலர்ட் செய்து கொண்டே இருக்கிறார்.. பல்வேறு ஆரோக்கிய டிப்ஸ்களையும் தந்து, விழிப்புணர்வையும் ஊட்டி கொண்டிருக்கிறார்.. இந்நிலையில், வைரஸ் வேகமாக பரவுவதாக சொல்லப்படும் நிலையில் விஜயகாந்த்தின் இந்த கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது... தலைவர்களின் அடுத்தடுத்த அலர்ட் கிளம்பி உள்ளதால், ஒருவேளை லாக்டவுன் அலம்படுத்தப்படுமா? என்ற அக்கறை மிகுந்த சந்தேகமும் எழுந்து வருகிறது.

English summary
vijayakanth demands that tamil nadu government to implement coronavirus guidelines again severely
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X