விஜயகாந்த் உடல் நிலை எப்படி உள்ளது? தேமுதிக தொண்டர்களுக்கு மா.சுப்ரமணியன் சொன்ன குட் நியூஸ்
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை எப்படி உள்ளது என்று தொண்டர்கள் பதைபதைப்போடு காத்துக்கொண்டிருக்க அவர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை கூறியுள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சனிக்கிழமை இரவு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர்கள் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.
செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும்வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயகாந்திற்கு தொடர்ந்து இருமல் பாதிப்பு இருந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் விஜயகாந்த் உடல்நிலை சீராகவே உள்ளது. ஏற்கனவே சிறுநீரகம் மாற்று சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார் என்று கூறியுள்ளார்.
கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த். சட்டசபையிலும் பொதுக்கூட்ட மேடைகளிலும் அவர் பேசிய பேச்சுக்கள் இன்றைக்கும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருக்கிறார். பேச முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். அவர் உடல் நலமடைந்து பழைய விஜயகாந்த் ஆக திரும்ப வரவேண்டும் என்பதே தேமுதிக தொண்டர்கள் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications