விஜயகாந்த் பூரண நலம்.. காலையிலேயே மருத்துவமனையில் வந்த நல்ல செய்தி.. தொண்டர்கள் உற்சாகம்
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாஆகியோரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டததால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள் என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கொரோனாவால் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில நாளில் அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான, பிரேமலதா விஜயகாந் துக்கும் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டது.

அவரும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருவரது உடல் நிலை சீராக இருந்து வந்ததாக மருத்துவமனை அண்மையில் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் இன்று காலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆகிய இருவருக்கும் கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இருவரும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக்குழுவினரால் தொடர் மதிப்பீடு செய்யப்பட்டு கண்காணிப்பில் இருந்தனர்.
இருவரும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததன் மூலம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications