கேப்டன் நல்லாயிட்டாரு… கூட்டணியை சீக்கிரமா அறிவிக்க போறாரு.. ஹேப்பியான பிரேமலதா
சென்னை:விஜயகாந்த் நலமாக உள்ளதாகவும், கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அவரே அறிவிப்பார் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக கட்சி தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சிகிச்சைக்கு பின்... விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தார்.

அதிகாலை சென்னை திரும்பினாலும், 10 மணி நேரத்திற்கு பிறகே விமான நிலையத்தை விட்டு விஜயகாந்த் வெளியே வந்தார். பேட்டரி காரில் வந்த விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். விஜய காந்தை வரவேற்க விமான நிலையத்தில் குவிந்த தேமுதிக தொண்டர்களும், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பிரேமலதா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:கேப்டன் நலமாக உள்ளார். 25 மணி நேரம் பயணம் செய்து வந்ததால் களைப்பின் காரணமாக அவர் ஓய்வு எடுத்தார்.
அவருக்கு மேல்சிகிச்சை நல்ல முறையில் நடைபெற்றது. தற்போது அவர் பூரண நலமுடன் உள்ளார். தமிழகத்தில் முக்கிய கட்சிகள் அனைத்துமே தேமுதிகவோடு கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. இன்னும் ஓரிரு நாளில் கூட்டணி குறித்து விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications