மோடி கூட்டத்திற்கு.. கடைசி வரை விஜயகாந்த் வரவே இல்லையே!
பிரதமரின் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பரா என தெரியவில்லை
Recommended Video

சென்னை: இன்று நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் வருவாரா? மாட்டாரா என்ற சந்தேகம் இருந்த நிலையில் கடைசி வரை அவர் வரவே இல்லை.
விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து வந்து 20 நாளைக்கும் மேலாகிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகவில்லை. தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.
கடந்த முறை கன்னியாகுமரிக்கு மோடி வந்தபோதே எல்லா கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் நின்று கூட்டணி பலத்தை காட்ட வேண்டும் என்று பிளான் செய்யப்பட்டது. ஆனால் தேமுதிகவின் பிடிவாதம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

ஓ.பன்னீர்செல்வம்
இதனால் இன்றைய தினம் மோடி வரும்போதாவது எல்லாரும் ஒன்றாக சேர்ந்து பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக மேலிடம் கூறியிருந்தது. இதற்காகத்தான் துணை முதல்வரே விஜயகாந்த் வீடு தேடி சென்று பேசிவிட்டு வந்தார். ராமதாசுக்கு தந்த சீட் போல அல்லது அதற்கு இணையான ஒரு சமாச்சாரத்தை தந்தே ஆக வேண்டும் என்று தேமுதிக தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வந்தது.

படம் இல்லை
இன்னைக்குதான் விழா.. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக போய் கொண்டிருந்தது. ஆனால் கூட்டணி முடிவாகாத நிலையில் விழாவுக்கு விஜயகாந்த் வருவாரா, என்ற குழப்பம் இருந்தது. விழா அழைப்பிதழில் கூட்டணி தலைவர்கள் எல்லாம் சேர்ந்து மோடியை வரவேற்பது போல ஒரு அச்சிட்டிருந்தனர். அதில் விஜயகாந்த் படம் இடம்பெறவில்லை. முதல்வர், துணை முதல்வர், இதற்கு அடுத்து ராமதாஸ் படங்கள் என இருந்தன. விஜயகாந்த் மட்டும் இல்லை.

ராமதாஸ் புகைப்படம்
ஒருவேளை விஜயகாந்த் படத்தை போட்டுவிட்டால், அவர் வராவிட்டால் என்னாகும்? அசிங்கப்படுவது போல் ஆகிவிடுமா என்று நினைத்து விஜயகாந்த் படத்தை போடவில்லை. கடைசியில் அதுதான் நடந்தது.

தனி பாசம்
பாஜக மீது விஜயகாந்த்துக்கு தனிப்பட்ட மரியாதை இருக்கிறது. விஜயகாந்த் மீதும் மோடி, அமித்ஷா, பியூஷ்கோயல் உள்ளிட்டவர்களுக்கு தனி பாசமே உள்ளது. இதற்காகவாது விஜயகாந்த் வருவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜயகாந்த்தை அழைத்து வராமல் தேமுதிக ஏமாற்றி விட்டது.

கேப்டன் வருவாரா?
விஜயகாந்த்தை பொது மேடையில் பார்த்து தமிழக மக்களுக்கு ரொம்ப நாளாகிவிட்டது. சென்னை வந்ததிலிருந்து மக்களை அவர் சந்திக்கவும் இல்லை, பேசவும் இல்லை. அதனால் இன்றைக்கு கேப்டன் வந்தால் ஆசை குளிர பார்க்க மக்கள் காத்திருந்தார்கள்.. ஆனால் அவர் கடைசி வரை வரவே இல்லை.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications