சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேச முடியாது.. சிரித்தபடி சைகை காட்டிய விஜயகாந்த்.. நெகிழ்ந்து போன நிருபர்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சிரித்தபடி சைகை காட்டிய விஜயகாந்த்.. நெகிழ்ந்து போன செய்தியாளர்கள்!- வீடியோ

    சென்னை: செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர்களைப் பார்த்து சிரித்தபடி தன்னால் பேச முடியாது என்று தனது தொண்டையைக் காட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் சைகை காட்டியபோது செய்தியாளர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

    அதிமுக கூட்டணியில் இன்று தேமுதிக இணைந்தது. 4 தொகுதிகளில் அது போட்டியிடவுள்ளது. இதையொட்டி கிரவுன் பிளாசா ஹோட்டலில் ஒப்பந்தம் கையெழுத்தானது தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

    Vijayakanth meets the press after a long time

    ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் செய்தியாளர்களை அனைவரும் கூட்டாக சந்தித்தனர். செய்தியாளர் கூட்டத்திற்கு விஜயகாந்த்தை கைத்தாங்கலாக அழைகத்து வந்த அமர வைத்தனர். அப்போது செய்தியாளர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் சரமாரியாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். அதை தனக்கே உரிய வெள்ளந்தி சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த்.

     கடைசியில் நான்குதான் கிடைத்தது.. அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடபோகும் தொகுதிகள் இவைதான்! கடைசியில் நான்குதான் கிடைத்தது.. அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடபோகும் தொகுதிகள் இவைதான்!

    அப்போது செய்தியாளர்களைப் பார்த்து சிரித்தபடி தனது தொண்டையை சுட்டிக் காட்டி பேச முடியாது என்று அவர் சைகை காட்டிக் கூறினார். இதைப் பார்த்து செய்தியாளர்கள் நெகிழ்ந்து போனார்கள். எத்தனை கேள்விகள் கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்லும் அல்லது தனது தரப்பை நியாயப்படுத்த கடுமையாக வாதாடும் அந்த பழைய விஜயகாந்த்தை நினைத்துப் பார்த்து நிருபர்கள் வருத்தமடைந்தனர்.

    மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்த் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். சிரித்த முகத்துடன் காணப்பட்ட அவரைப் பார்த்து செய்தியாளர்களும் கூட உற்சாகமடைந்தனர்.

    English summary
    DMDK president Vijayakanth met the press after a very long period. But could not speak anything due to his illness.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X