வீடு தேடி வந்த உதயநிதி.. நெகிழ்ந்து போன விஜயகாந்த் குடும்பம்.. பதிலுக்கு ஸ்டாலினை சந்தித்து.. செம்ம!
சென்னை ;தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வாழ்த்து தெரிவித்தார். அவஐருடன் வந்த தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீசும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
தமிழகத்தில் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்துள்ளது.
தமிழகத்தின் முதல்வராக முதல்முறையாக முக ஸ்டாலின் கடந்த மே 7ம் தேதி பதவி ஏற்றார். அவருக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.

தலைவர்கள் வாழ்த்து
தேசிய அளவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், பல்வேறு மாநில எதிர்க்கட்சி தலைவர்கள், எம்பிக்கள் ஸ்டாலினை போனில் அழைத்தும, ட்விட்டரிலும் வாழ்த்து தெரிவித்தனர்.

எல்.கே.சுதீஷ்
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் இன்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியில் வென்று முதல்முறையாக எம்எல்ஏ ஆன நிலையில், பல்வேறு முக்கிய தலைவர்களை வீடு தேடி நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் அவரது வீடு தேடி சென்று சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதனை கண்டு விஜயகாந்த் குடும்பத்தினர் நெகிழ்ந்து போயினர்.

வரவேற்ற ஸ்டாலின்
இந்நிலையில் தான், தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவிக்க விரும்பினர். இதை அறிந்த ஸ்டாலின் அவர்களை வரவேற்றார். அங்கு சிறிது நேரம் பேசிவிட்டு, வாழ்த்து தெரிவித்துவிட்டு அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

தேர்தலில் தோல்வி
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுகு கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக, தொகுதி பங்கீடு ஒத்துவராததால், கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகியது. அமமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது . ஆனால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோலவியை சந்தித்துள்ளது.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications