"நீ என்ன பெரிய ஆளா! வாடா பார்ப்போம்" இரும்பு ராடுடன் விஜயகாந்த்.. தெறித்து ஓடிய வாட்டாள் நாகராஜ்
சென்னை: கர்நாடகாவில் நடந்த படப்பிடிப்பின் போது வாட்டாள் நாகராஜ் ரகளை செய்த போது தனியாளாக போய் அவரை விரட்டி அடித்தார் விஜயகாந்த்.
நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரது உடலுக்கு கட்சியினர், தொண்டர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அவர் குறித்த நினைவுகளை பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

விஜயகாந்த் என்றாலே அள்ளி அள்ளி கொடுப்பவர் என்றுதான் சொல்வார்கள். யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் சரி முதலில் ஓடி போய் நிற்பவர் விஜயகாந்த்தான். தனது கல்லூரிகளில் ஏழைகளுக்கெல்லாம் இலவசமாக சீட் கொடுத்திருக்கிறார்.
ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயரிட்டவர். ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையை கண்டித்து தமிழ் திரையுலகை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர். இந்த நிலையில் பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த தமிழ்ச் செல்வன் பட ஷூட்டிங் மைசூர் அருகே தொடங்கியது.
கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே கொல்லேகால் பகுதியில் நடந்தது. அப்போது படக்குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வாட்டாள் நாகராஜும் அவருடைய கட்சி நிர்வாகிகளும் வந்தனர். அங்கு தமிழ்மொழியில் வைக்கப்பட்டிருந்த கிளாப் போர்டை பயன்படுத்தக் கூடாது என தகராறு செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
எனினும் வாட்டாள் நாகராஜின் ஆட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் காரில் வந்த விஜயகாந்த், இயக்குநர் பாரதிராஜாவிடம் என்ன பிரச்சினை என கேட்டிருந்தார். பாரதிராஜா விஷயத்தை
சொன்னதும் விஜயகாந்தின் கண்கள் சிவந்தன. காரில் இருந்து இரும்புக் கம்பியை எடுத்துக் கொண்டு ஆவேசமாக கிளம்பினார் விஜயகாந்த்.

அப்போது வாட்டாள் நாகராஜ் இருந்த இடத்திற்கு தனி ஆளாக சென்று வாட்டாள் நாகராஜ்னா பெரிய ஆளா.. வாடா பார்த்துக்குவோம் என சவால் விட்டார். வேட்டியை மடித்துக் கொண்டு கையில் இரும்புக் கம்பியுடன் விஜயகாந்தை பார்த்த வாட்டாள் ஷாக் ஆகி தனது ஆதரவாளர்களுடன் ஓடிவிட்டாராம்.
எனினும் மேலும் பிரச்சினை வருமோ என்ற அச்சத்தில் கிளாப்போர்டில் தமிழ்ச்செல்வன் என்ற பெயரை போட வேண்டாம் என பாரதி ராஜா சொன்னார். உடனே விஜயகாந்த் அதற்கு சம்மதிக்காமல் தமிழில் எழுதப்பட்ட பெயர் பலகையை நீக்கினால் நான் இந்த படத்தில் நடிக்கவே மாட்டேன் என கூறிய பிறகு கிளாப் போர்டில் தமிழ் செல்வன் என்ற பெயர் பயன்படுத்தகப்பட்டது.












Click it and Unblock the Notifications