சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விஜயகாந்த்துக்கு வந்த கோபம்.. "சதீஷை தூக்குல போடுங்க.. சுவாதி, சுவேதா, சத்யா கொடுமை".. தேமுதிக ஆவேசம்

விஜயகாந்த் சத்யா கொலைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் மாணவி சத்யாவை கொன்ற குற்றவாளி சதீஷுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று விஜயகாந்த் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா.. 20 வயதாகிறது.. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 2 ம் ஆண்டு படித்து வந்துள்ளார் சத்யா..

இவரது அம்மா ராமலட்சுமி சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ்.. 23 வயதாகிறது.. இவர் ஓய்வு பெற்ற காவலரின் மகன்.. அதனால், சத்யா வசித்து வந்த அதே போலீஸ் குவார்ட்டஸிலேயேதான் இவர்களும் வசித்து வந்துள்ளனர்.

மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்.. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு! மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்.. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு!

டார்ச்சர்

டார்ச்சர்

சத்யாவும் சதீஷும் கடந்த சுமார் 6 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.ஆனால், கடந்த சில மாதங்களாக சதீஷுக்கும் சத்யாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.. சதீஷின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்று கூறி சத்யா அவரை தவிர்க்க தொடங்கியதாககவும், இதனால் மனம் உடைந்த சதீஷ் சத்யாவை பல முறை பின் தொடர்ந்து சமாதானம் செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சத்யா அதற்கு உடன்படவில்லை.. தன்னை காதலிக்குமாறும் தொடர்ந்து சதீஷ் சத்யாவிடம் டார்ச்சர் தந்து வந்துள்ளார்..

 துண்டு துண்டு

துண்டு துண்டு

இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் சென்று, சத்யாவை சந்தித்து மீண்டும் அவரை சமாதானம் செய்ய முயன்றுள்ளார் சதீஷ். அப்போது இருவருக்கும் திடீரென சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. கோபத்தின் உச்சிக்கு சென்ற சதீஷ் ஓடிக்கொண்டிருந்த ரயில் முன்பு சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார். அந்த சமயத்தில் வந்த மின்சார ரயிலில் மோதிய சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ரயிலில் பிடித்து தள்ளிவிட்டதுமே சத்யாவின் தலை துண்டு துண்டாக சிதறி விழுந்துள்ளது..

 டிஜிபி

டிஜிபி

இதனிடையே, சத்யாவின் அப்பா மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.. ராஜீவ் காந்தி மருத்துவமனையின் பிணவறையில் 2 உடல்களும் அருகருகே வைக்கப்பட்டு இருந்ததை கண்டு, உறவினர்கள் கதறியது காண்போரை நிலைகுலைய வைத்தது.. சத்யாவை கொன்றுவிட்டு தப்பி சென்ற சதீஷை போலீசார் கைது செய்து, 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர். சத்யபிரியா கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சத்யா

சத்யா

அடுத்தடுத்து நடந்த இந்த துயர சம்பவங்களை கண்டு தமிழக மக்களும் உறைந்து போயுள்ளனர்.. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் கண்டனங்களையும், சத்யாவின் மரணத்துக்கு நீதியும் கேட்டு வருகின்றனர்.. தமிழக அரசியல்கட்சி தலைவர்களும் தங்கள் வலுவான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் கண்டனம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது:

 விஜயகாந்த்

விஜயகாந்த்

"கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகள் இறந்த துக்கத்தில் தந்தையும் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 2016ல் சுவாதி, 2021ல் சுவேதா, தற்போது சத்யபிரியா என ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவிகள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது மிகுந்த கவலை அளிக்கிறது.

 விஜயகாந்த் வார்னிங்

விஜயகாந்த் வார்னிங்

ஒரு தலையாக காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்தால் ஆத்திரத்தில் அப்பெண்ணை கொலை செய்வது என்பது எந்தவிதத்தில் நியாயம். குற்றவாளி சதீசுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இனிமேல் காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகளும் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்" என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Vijayakanth urges maximum punishment for Satish in Chennai student Sathya murder case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X