நம்ம விஜயகாந்த்தா இது.. கொஞ்சம் பாருங்களேன்.. அப்படியே மலைக்க வைக்கும் "2 கருப்பு தங்கங்கள்".. வாவ்
விஜயகாந்த் பிரெய்ன் லாராவுடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது
சென்னை: விஜயகாந்த் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதை பார்த்து பலரும் நம்ம விஜயகாந்த்தா? இது என ஆச்சரியப்பட்டு திகைத்து வருகிறார்கள்.
தமிழகத்திற்கு அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என மறக்க முடியாத முதல்வர்களை இந்த கலைத்துறை தந்துள்ளது.. அந்தவகையில், தனக்கென தனி ரசிகர் வட்டத்தை பெற்றிருந்த விஜயகாந்துக்கும், இந்த லிஸ்ட்டில் இணைய ஆர்வம் இருக்கத்தான் செய்தது.
அதற்கேற்றவாறு, சிவப்பு மல்லி, சட்டம் ஒரு இருட்டறை, ஏழைஜாதி உள்ளிட்ட பல படங்களில் அரசியல் நெடி சற்று தூக்கலாகவே இருந்ததை மறுக்க முடியாது.

விஜயகாந்த்
ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றியதுடன், எட்டாவது வள்ளல் என்று சக கலைஞர்களால் போற்றப்படும் அளவுக்கு உதவிகளை செய்தார்.. சினிமாவில் இருந்தபோதும்சரி, கட்சியை துவக்கியபோதும் சரி, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் தருவது, இலவச திருமணங்களை நடத்துவது, வருடந்தோறும் பல லட்சம் ரூபாயை கல்வி உதவித்தொகை வழங்குவது என்று மாநிலம் முழுவதும் உதவிகளை செய்து, மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தில் உட்கார்ந்துவிட்டார் விஜயகாந்த்.

சிக்ஸர்
விஜயகாந்தின் அரசியல் துணிச்சலை, வானளாவ புகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் அவரது தொண்டர்கள்.. ஜெயலலிதாவை எதிர்க்க பல அரசியல்வாதிகள் துணிவின்றி நடுநடுங்கிய நிலையில், துணிச்சலுடன் எதிர்கேள்வி கேட்டு, வியப்பை கூட்டியவர் விஜயகாந்த். "மக்களை சந்திக்காமல் மந்திரியாவது அயோக்கியத்தனம்" என்று அன்று அன்புமணியை நேரடியாகவே விமர்சித்ததையும் யாராலும் மறக்க முடியாது.. கடந்த 2011ல் எடுத்த எடுப்பிலேயே "எதிர்கட்சித் தலைவர்" என்று சிக்ஸர் அடித்தது ஒட்டுமொத்த தமிழக கட்சியையும் கதிகலங்க செய்ததுபோல், மீண்டும் அரசியலுக்கு வந்து கர்ஜிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களும் தொண்டர்களும் ஏங்கி கிடக்கின்றனர்..

ஈர மனசு
அதுமட்டுமல்ல, கட்சி, அரசியலையும் தாண்டி தமிழக மக்களுக்கு விஜயகாந்த் மேல் எப்போதுமே ஸ்பெஷல் பாசம் உள்ளது... அதனால்தான், அவருக்கு எப்போது உடம்பு சரியில்லை என்றாலும், கோயிலுக்கு போய் அவருக்காக வேண்டி கொள்ளும் அளவுக்கு அக்கறையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதேபோல, எத்தனையோ யூடியூப்களிலும், பேட்டிகளிலும், எண்ணற்ற திரை கலைஞர்கள், விஜயகாந்த்தின் ஈர மனசு குறித்து தினமும் பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.. அவருடனான தங்கள் நெருக்கத்தையும், விஜயகாந்தின் தங்கமனதையும், நெகிழ்ந்தும், மகிழ்ந்தும், பூரித்தும், கலங்கியும் தெரிவிக்கும் தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்து கொண்டுள்ளன.

பிளாக் & ஒயிட்
அந்தவகையில், இன்றுகூட விஜயகாந்த் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.. கிரிக்கெட் வீரர் பிரைன் லாராவுடன் விஜயகாந்த் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ அனைவரையும் ஈர்த்து வருகிறது.. பிளாக் & ஒயிட்டில் இந்த போட்டோ உள்ளது.. விஜயகாந்த் ஃபுல் மேக்கப்பில் காணப்படுகிறார்.. ஏதோ நிகழ்ச்சி அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோ போல தெரிகிறது.. எம்ஜிஆர், என்டிஆரின் தீவிர ரசிகரான விஜயகாந்த்துக்கு, கிரிக்கெட், கால்பந்து என்றால் உயிர் என்று முன்பெல்லாம் பத்திரிகைகளில் எழுதுவார்கள்.. அதேபோல, விஜயகாந்த்தும், விளையாட்டில் தனக்கான ஆர்வம் குறித்து பேட்டிகளை தந்துள்ளார்.

கருப்பு தங்கம்
ஆனால், விஜயகாந்த், திரையுலகினர் நடத்தும் விளையாட்டு போட்டிகளில் நேரடியாக கலந்து கொண்டதாகவே அல்லது பங்கேற்றதையோ யாரும் அவ்வளவாக பார்த்ததில்லை.. பிரபல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரான பிரைன் லாராவுடன் எடுத்துக் கொண்ட அரிய போட்டோவை பார்க்கும்போது, பிரெய்ன் லாரா மீதான அன்பு மட்டுமல்ல, விஜயகாந்த்துக்கு கிரிக்கெட் மீதான காதலும் வெளிப்படுகிறது.. இந்த போட்டோவை பார்த்துவிட்டு, இணையவாசிகள் லைக்குகளையும் கமெண்ட்களையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர். இந்த 2 கருப்பு தங்கங்களின் போட்டோதான், இணையத்தில் ரவுண்டு அடித்து கொண்டிருக்கிறது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications