தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு லேசான அறிகுறியுடனான கொரோனா பாதிப்பு இருந்தது. இதனால் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்பில் இருந்து விஜயகாந்த் குணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே விஜயகாந்த் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தது.
இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்துடன், பிரேமலதா உடன் இருந்து கவனித்து வந்தார். இந்த நிலையில் குடும்பத்தில் உள்ளவர்கள் மீண்டும் பரிசோதனை செய்தனர்.
அப்போது, விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உடனடியாக மியாட் மருத்துமவனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேமுதிக கட்சி நிகழ்ச்சிகள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிரேமலதா தான் தலைமையேற்று நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications