அனைத்து தொகுதிகளிலும் விஜயகாந்த் நேரடியாக பிரச்சாரம் செய்வார்.. மகன் புதிய தகவல்
விஜயகாந்த் நேரடி பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் வருகிற மக்களவை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் நேரடியாக பிரச்சாரம் மேற்கொள்வார் என்று விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்படிக்கையின்போது, விஜயகாந்த் வந்தே ஆக வேண்டும் என்று கண்டிஷன் போடப்பட்டதாம்.ஆனால் கேப்டனை கிளப்பிக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால், தேமுதிக தலைமை அலுவலகத்தில் உடன்படிக்கை கையெழுத்திடலாம் என பிரேமலதா சொன்னாராம்.
ஆனால், இரு கட்சிகள் சம்பந்தப்படும்போது, பொதுவான இடத்தில் கையெழுத்திடுவதுதான் சரியாக இருக்கும் என்பதால் தேமுதிக தலைமை அலுவலகம் செல்ல அதிமுக மறுத்துவிட்டதாம்.

கைத்தாங்கல்
இதனால்தான் கிரவுண் பிளாசா ஹோட்டலுக்கு விஜயகாந்த்தை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டு பிறகு நேற்றிரவு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனையடுத்துதான், செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதற்கு கேப்டனை கைத்தாங்கலாகத்தான் கூட்டிவந்து உட்கார வைத்தார்கள். ஆனால் விஜயகாந்த் எதுவுமே பேசவில்லை. செய்தியாளர்களுக்கும் - விஜயகாந்த்துக்கும் ஒரு "நெருக்கமான பந்தம்" இருந்தாலும், நேற்று அது எல்லாமே மிஸ்ஸிங்!

பேசவில்லை
ஆனால் விஜயகாந்த்தை ரொம்ப நாள் கழித்து பார்த்த திருப்தி செய்தியாளர்கள் கண்ணில் தெரிந்தது. தொண்டை சரியில்லை என்று விஜயகாந்த் சைகை செய்தது பார்க்க மனக்கஷ்டமாக இருந்தாலும், ஓரிரு வார்த்தைகளாவது விஜயகாந்த் பேசியிருக்கலாம், அல்லது பேசியிருக்க முடியும் என்றே முணுமுணுக்கப்படுகிறது.

விஜயபிரபாகரன்
இந்த நிலையில், நேற்று பெரம்பலூர் மாவட்ட கிராமப்பகுதிகளில் தேமுதிக சார்பில் கட்சி கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விஜயபிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நேரடி பிரச்சாரம்
அப்போது பேசும்போது, "திமுக பொருளாளர் துரைமுருகன் தேமுதிக குறித்து பேசியதால், தேதிமுகவின் திருஷ்டி அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது தேமுதிக நேர்மறையான ஆற்றல் மிக்கதாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் வருகிற மக்களவை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் நேரடியாக பிரச்சாரம் மேற்கொள்வார்" என்று சொன்னார்.

பூரண குணம்
ஆக மொத்தம், ஒரு இடத்துக்கு வருவதே விஜயகாந்த்தால் எளிதாக முடியவில்லை, அதோடு ஓரிரு வார்த்தைகளும் பேச முடியாத நிலை உள்ளது. எனவே விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஆசையாக இருக்கிறது.

மகிழ்ச்சிதான்
எதார்த்தத்தை மக்கள் புரிந்து கொண்ட அளவுக்கு கூட அவரது மகனுக்கு புரியவில்லையா, எப்படி நேரடி பிரச்சாரத்தில் இறங்க முடியும் என்பது கேள்வியாக எழுகிறது. தேமுதிக தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்காக இப்படி பேசினாரா என்று தெரியாது, ஆனால் பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் வந்தால் மக்களுக்கு சந்தோஷம்தானே!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications