நத்தம் விஸ்வநாதனுக்கு நல்ல நேரம்! விஜயகாந்திடம் அடிவாங்காமல் தப்பித்தார்! மாஜி MLA பகிரும் பழைய கதை!
சென்னை: விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டசபையில் குறுக்கே டேபிள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், அப்போது அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதனை அடித்திருப்பார் என சென்னை எழும்பூர் தொகுதி தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி ஃபிளாஷ்பேக் பகிர்ந்துள்ளார்.
விஜயகாந்த் சட்டசபையில் நாக்கை துருத்தியதற்கு காரணமே அப்போது அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், அதிமுக எம்.எல்.ஏ.வாகவும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகியாகவும் இருந்த சின்னச்சாமி உள்ளிட்ட இன்னும் ஒன்றிரண்டு பேர் தான் என நல்லதம்பி தெரிவித்துள்ளார். விஜயகாந்தை தனிப்பட்ட முறையில் அவர்கள் ஒருமையில் பேசியதால் தான் இவருக்கு இந்தளவுக்கு கோபம் வந்ததாக கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு நடக்கும் போது தாமும் சட்டசபையில் தான் இருந்தேன் என்றும், விஜயகாந்த் நாக்கை துருத்தி பேசும் வீடியோவை வெளியிட்டவர்கள் எதற்காக அப்படி பேசினார், அவரை சீண்டும் வகையில் யார் நடந்து கொண்டார்கள் என்ற வீடியோவை வெளியிடவில்லை என வேதனைத் தெரிவித்தார்.
தன்னையும் சிலர் அப்போது கோடிகளில் விலை பேசினார்கள் என்றும் ஆனால் தன்னால் விஜயகாந்துக்கு துரோகம் செய்ய முடியாது எனக் கூறிவிட்டதாகவும் எழும்பூர் தொகுதி தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி தெரிவித்துள்ளார். விஜயகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட காரணமே, அவருக்கு துரோகம் செய்துவிட்டு போன சட்டமன்ற உறுப்பினர்கள் தான் என்றும் மனதளவில் மனிதர் நொந்து போய்விட்டார் எனவும் நல்லதம்பி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சிறுவயது முதலே நண்பனாக இருந்த மதுரை சுந்தர்ராஜன், ஈரோடு சந்திரக்குமார் போன்றவர்கள் விலகியதை விஜயகாந்தால் ஏற்கவே முடியவில்லை என நல்லதம்பி கூறினார்.
தேமுதிகவிலிருந்து விலகிய பலரும் இப்போது மனம் கேட்காமல் மீண்டும் தேமுதிகவிலேயே இணைவதற்கு முயற்சித்து வருவதாகவும் அனைவரையும் அரவணைத்துச் செல்ல பிரேமலதாவும், விஜய பிரபாகரனும் தயாராக இருப்பதாகவும் நல்லதம்பி தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications