"சக்கரம்" சுழல்கிறது.. தேமுதிகவை ஓவர்டேக் செய்த சீமானின் நாம் தமிழர் கட்சி.. பிரேமலதா சொன்ன வார்த்தை
திமுக அரசு குறித்து பிரேமலதா விஜயகாந்த் சரமாரியாக விமர்சித்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: தன்னுடைய குடும்பத்திலிருந்து எந்த வாரிசுகளும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின் தான், இப்போது தன்னுடைய மகனான உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக அமர வைக்க ஆசைப்படுகிறார்.. இதற்கு மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 4வது இடத்தை பெற்று, டெபாசிட்டை தேமுதிக இழந்தது என்றாலும், வரப்போகும் தேர்தலில் இக்கட்சி யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்கிற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாகவே ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம், கடந்த 2 வருட காலமாகவே திமுகவை அந்த அளவுக்கு தேமுதிக விமர்சிக்கவில்லை. மற்றொருபுறம், அதிமுக மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. அதிலும் இடைத்தேர்தலின்போது நடந்த பிரச்சாரத்தில்கூட, அதிமுகவையே அதிகம் சாடியிருந்தார் பிரேமலதா..

விஜயகாந்த் ப்ளான்
ஆனால், தற்போது தேமுதிகவின் நிலைப்பாடு மெல்ல மெல்ல மாறி வருவதாக தெரிகிறது.. அத்துடன் அதிமுக பக்கம் சாய்வதாகவும் தெரிகிறது.. 4 நாட்களுக்கு முன்பு, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, "எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் திருட்டு வழக்கு போட்டுள்ளனர். என்ன கொடுமை இது? முன்னாள் முதல்வர் மீது இப்படியா வழக்கு போடுவார்கள்? இந்த அரசு கீழ்த்தரமாக இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று என்று சீறியிருந்தார்.. பிறகு மறுநாளே புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா, நேரடியாகவே திமுக அரசை சாடினார்..

வம்படி
"ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கேள்விப்படும்போது மனது வருத்தமாக இருக்கிறது.. 'நான் போட்டியிடவில்லை, எனக்கு உடல்நிலை சரியில்லை' என்று ஈவிகேஎஸ் சொன்னபோதும், வம்படியாக இளங்கோவனை தேர்தலில் நிற்க வைத்து உள்ளது திமுக. ஜனநாயகத்திற்கு முற்றிலுமாக ஒரு தேர்தல் நடந்தது என்றால் அது ஈரோடு இடைத்தேர்தல் தான்... தேர்தல் ஆணையம் உள்ளதா? என்ற கேள்விக்குறி இப்போது எழுந்துள்ளது. சொந்த கட்சி நிர்வாகிகளே போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து அடித்து நொறுக்குவது, சொந்த கட்சி எம்பி வீட்டையே தாக்குதலுக்கு உள்ளாக்குவது தான் திராவிட மாடல்.

கலைஞர் கருணாநிதி
இதுவே, கலைஞர் உயிரோடு இருந்திருந்தால், இப்படிப்பட்ட சம்பவங்கள் எல்லாம் இங்கே நடந்திருக்குமா? இதற்கு முதல்வர் ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும். ஏற்கனவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் சொன்னதுபோல, தற்போது புதுச்சேரியில் பெண் குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வைப்புத்தொகை அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அமைச்சர்கள் பலரும் மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு அவர்களின் நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன.. இதுதான் திராவிட மாடல். பேராசிரியர் ஒருவரை நடுரோட்டில் அடித்து இழுத்து சென்று அவர்களிடம் இருந்து நகைகளை பறித்து செல்லும் சம்பவமும் நடந்துள்ளது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை என்று காட்டமாக கூறியிருந்தார்.

சக்கரம்

4 ஒயின்ஷாப்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக ஆக போகிறார் என்று மூத்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் பேசுகிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தன்னுடைய குடும்பத்திலிருந்து எந்த வாரிசுகளும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின் தான், இப்போது தன்னுடைய மகனான உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக அமர வைக்க ஆசைப்படுகிறார்.. இதற்கு மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.. தமிழகத்தில் பெண்கள் கூட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.. தெருவுக்கு 4 ஒயின்ஷாப்புகள் என 24 மணி நேரங்களும் மது கிடைப்பதால் சட்டம் ஒழுங்கு பெரிதளவில் பாதிப்புகளுக்கு சீர்குலைந்து போகிறது" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications