ஈழப்போர் நடந்துகிட்டு இருந்தப்ப.. சீமான் என் கூடதான் இருந்தாரு.. சிவந்த கண்களுடன் விஜயலட்சுமி வீடியோ
சென்னை: ஈழப்போர் நடந்துகிட்டு இருந்த போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடன் இருந்ததாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி, சீமான் பிரச்சினை அவ்வப்போது துளிர்த்து பின்னர் அப்படியே அடங்கிவிடும். அந்த வகையில் தற்போது மீண்டும் இந்த பிரச்சினையை விஜயலட்சுமி கிளப்பியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு வாழ்த்துகள் படத்தில் நடித்த போது சீமான் தன்னுடன் நெருங்கி பழகியதாகவும் தன்னை கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி ஏமாற்றியதாகவும் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.
தன்னை ஏமாற்றிவிட்டு 2013 இல் கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்டார் சீமான். தன்னை சீமான் ஏமாற்றியதால் அவ்வபோது சீமான் குறித்து அவதூறு பேசி விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு வருவார். அதற்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவிப்பதோடு விஜயலட்சுமியை அவதூறாக பேசி கமென்ட் போடுவர் .
இதனால் ஒரு கட்டத்தில் மனஉளைச்சல் அடைந்த விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றார். அவரை டான்ஸ் மாஸ்டர் காயத்ரி மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இந்த நிலையில் தற்போது தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமியுடன் இணைந்து சீமான் கேஸை மீண்டும் தூசு தட்டி எடுத்துள்ளார் விஜயலட்சுமி.
கடந்த வாரம் சீமானை கைது செய்ய வேண்டும் என வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து பேசுவதை கேவலமாக இருப்பதாக சீமான் பிரஸ்மீட்டில் தெரிவித்தார். மேலும் தன்னை திருமணம் செய்து கொண்டதற்கான புகைப்படத்தை விஜயலட்சுமி வெளியிடட்டும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் லட்சியத்தை நோக்கி பயணிக்கும் தன்னை இரு லட்சுமிகளை கொண்டு ஒடுக்கிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விஜயலட்சுமி இதே போல் 6 பேர் மீது புகார் அளித்துள்ளார் என்றும் தான் 7ஆவது நபர் என்றும் தெரிவித்துள்ளார் சீமான். இதை டிவி பேட்டிகளில் பார்த்த விஜயலட்சுமி கடும் கோபத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நான் இதுவரை 6 பேர் மேல் புகார் கூறியிருக்கேனா, அப்ப நீ 7ஆவது நாமம் போட்டுக்க என் கிட்ட வந்தீயா, நான் 6 பேர் மேல புகார் கொடுத்திருந்தா எனக்கு எதுக்கு மார்ச் மாதம் காசு போட்டே. ஈழ போர்ல மக்கள் செத்துகிட்டு இருந்தப்ப நீ என் கூட ஆட்டம் போட்டுகிட்டு இருந்தியே. வேண்டாம் சீமான், சும்மா பெண்ணோட வாழ்க்கையில் விளையாடாதே.
செய்த தவறை உணர்ந்தால் பிரச்சினை சரியாகும். இல்லாவிட்டால் நான் விட மாட்டேன். மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறாய் என்றெல்லாம் சீமானை விஜயலட்சுமி ஒருமையில் பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. விஜயலட்சுமியின் கண்களில் அத்தனை கோபம் கொப்பளிக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications