"லட்சுமிகளின்" பின்னாடி அவங்கதான்.. விஜயலட்சுமியை இயக்குவதே "திராவிட கட்சி"தான்.. எகிறிய சீமான் கட்சி
சென்னை: லட்சுமிகளின் பின்னணியில் பல கட்சிகள் உள்ளதாக சீமான் குற்றஞ்சாட்டிய நிலையில், திராவிட கட்சிகளே விஜயலட்சுமியின் பின்னால் இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சி மகளிர் அணியினர் வெளிப்படையாக குற்றஞ்சாட்டி உள்ளனர்.
நடிகை விஜயலட்சுமி விவகாரம் வெடித்து வரும் சூழலில், நேற்றைய தினம், நாம் தமிழர் கட்சி சீமான், ஊட்டியில் சரமாரியாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
திராவிட கட்சிகள்: ஊட்டியில் சீமான் பேசும்போது, நடிகை விஜயலட்சுமி என் மீது குற்றம் சாட்டியது போலவே, பிரபல கன்னட நடிகர் உட்பட பலர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.. அதற்கான வீடியோவை பாருங்கள்.. லட்சியங்களுடன் அரசியலுக்கு வந்துள்ள என்னை லட்சுமிகளை வைத்து அவதூறு பரப்புகின்றனர்... என்னுடைய வளர்ச்சியை தாங்க முடியாமல், கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் பெண்களை வைத்து அரசியல் கட்சிகள் அவதூறு பரப்புகின்றன.

இது மிகவும் கீழ்த்தரமான கேவலமான அரசியலாகும். ஒரு நாள் நான் வெடித்து சிதறினால் அரசியல் கட்சிகள் தாங்காது. விஜயலட்சுமியை நான் கல்யாணம் செய்து இருந்தால் கல்யாண போட்டோவையோ, அல்லது கோவிலில் எடுத்த போட்டோவையோ அவர் வெளியிடட்டும் என்றார்.
லட்சுமிகளின் பின்னணியில் சில கட்சிகள் இருப்பதாக சீமான் கூடிறய நிலையில், நடிகை விஜயலட்சுமி பின்னணியில் திராவிட கட்சிகள் இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் மகளிரணியினர் குற்றம்சாட்டியுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை சார்பில், நடிகை விஜயலட்சுமி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றையும் தந்துள்ளனர்.
விஜயலட்சுமி: பிறகு செய்தியாளர்களிடம் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பர்ஹானா சொன்னதாவது, "நடிகை விஜயலட்சுமி தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பக்கூடிய நபர். இப்போது நாடாளுமன்ற தேர்தலையொட்டி சீமான் மீது பொய்யான புகாரை விஜயலட்சுமி பரப்பி வருகிறார். விஜயலட்சுமி பணம் பறிக்கும் நோக்கிலேயே சீமான் மீது பொய்யான புகார் அளித்துள்ளார். இதன் பிண்ணனியில் திராவிட கட்சிகளின் தூண்டுதல் இருக்கிறது.
12 வருடங்கள் கழித்து பொய்யான புகாரை அளிக்கும் விஜயலட்சுமி ஒரு பெண் என்பதால் சீமான் பொறுமையாக இருக்கிறார்.. ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி பல ஆண்கள் மீது புகார் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி இதனை தொழிலாகவே அவர் செய்து வருகிறார். நடிகை விஜயலட்சுமியிடம் யார் யாரெல்லாம் பணம் கொடுத்து உள்ளனர் என்ற ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
புகார்கள்: இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநில தலைவர் சேவியர் பெலிக்ஸ், "கடந்த 2011ம் ஆண்டு புகார் தந்துவிட்டு, மறுபடியும் இப்போது 2023ம் ஆண்டு அதே புகாரை அளிக்கிறார். இதையெல்லாம் நீதிமன்றம் கருத்தில் கொள்ளாது... ஆர்ட்டிவிசியல் இன்ட்டலிஜென்ஸ் மூலமாக சீமானும், விஜயலட்சுமியும் ஒன்றாக இருப்பது போல போட்டோவை உருவாக்கி இருக்கிறார்கள்.
விஜயலட்சுமியுடன் சீமான் திருமணம் செய்து கொண்டது என்பது நடக்கவே இல்லை... 2011ல் போடப்பட்ட வழக்கு பொய்யான வழக்கு. அதனை நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். யார் மீதும் புகார் கொடுக்கலாம், வழக்கும் பதிவு செய்யப்படலாம். ஆனால் நீதிமன்றம் தான் அதற்கு முறையாக தீர்ப்பு வழங்க வேண்டும்...
இழப்பீடு தொகை: 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பதற்காக விஜயலட்சுமி அவதூறு பரப்புகிறார். ஹரி நாடார் அவருக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை என்பதற்காக புகார் அளித்தவர்தான் இந்த விஜயலட்சுமி... விஜயலட்சுமி அளித்த பொய்யான புகாரில், காவல் ஆய்வாளர் அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.. இது குறித்து நீதிமன்றத்தில் நாங்கள் முறையிட உள்ளோம்" என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த சீமான், "போலீஸ் ஸ்டேஷனில் மனு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் விசாரிப்பார்கள்.. அது போலீசாரின் கடமை. உண்மையாகவே நான் குற்றவாளியாக இருந்தால் நீங்கள் நடவடிக்கை எடுங்கள்... அதுக்கெல்லாம் பயப்படும் ஆளில்லை... நான் வேறு ஊருக்கும் ஓடிப்போகவில்லை. வேறு மாநிலத்திற்கும் ஓடிப்போகவில்லை" என்றார்.
பயம் இருக்கட்டும்: உடனே செய்தியாளர், அதிமுக ஆடசியில் நடவடிக்கை இல்லை, ஆனால், திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று சொல்கிறாரே? என்றார்..
அதற்கு சீமானோ, "தாராளமா நடவடிக்கை எடுங்களேன்.. என்னதான் எடுப்பீங்க எடுங்களேன் நானும் பார்க்கறேன்.. எனக்கு பயமில்லை.. அந்த பயம் உங்களுக்கு இருக்கட்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications