50-50 கேட்ட விஜய்..ஆள விடு சாமி..எஸ்கேப்பான எடப்பாடி பழனிசாமி! மொத்தமாய் போச்சு..போட்டுடைத்த பிரபலம்
சென்னை: அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக கூட்டணி உருவாகும் என முன்னர் கூறப்பட்டது. ஆனால் தற்போது சாத்தியமில்லை என கூறப்படுகிறது. விஜயின் பிடிவாதம் தான் தவெக- அதிமுக கூட்டணி உருவாகாததற்கு காரணம் என கூறியுள்ளார் பிரபல எழுத்தாளரும் திராவிட இயக்கத்தை சேர்ந்தவருமான பழ.கருப்பையா.
அதிமுக பாஜக இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்வோம் என அறிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா. முன்னதாக விஜயும் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வார்கள் என கூறப்பட்டது.

ஆனால் விஜய் விதித்த நிபந்தனைகள் அதிர்ச்சி தரும் வகையில் இருந்ததால் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க பாஜக அதிமுக கூட்டணி அமைந்ததால் விஜய் தனித்து விடப்பட்டிருக்கிறார். கொள்கை எதிரியான பாஜக, அரசியல் எதிரியான திமுகவுடன் கூட்டு சேர முடியாத நிலையில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், விஜயின் பிடிவாதம் தான் தவெக- அதிமுக கூட்டணி உருவாகாததற்கு காரணம் என கூறியுள்ளார் பிரபல எழுத்தாளரும் திராவிட இயக்கத்தை சேர்ந்தவருமான பழ.கருப்பையா. நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உண்மையிலேயே பாவம் எடப்பாடி பழனிச்சாமி. விஜய் உடன் சேர்ந்து ஒரு சமய சார்பற்ற கூட்டணி அமைக்க வேண்டும் என்று தான் விரும்பினார். ஆனால் விஜய் எனக்கு பாதி இடம் உங்களுக்கு பாதி இடம். நான் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர், நீங்கள் இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் என்று சொன்னதால் வேறு வழியின்றி அவர்கள் வெளியேறி விட்டார்கள். புதிதாக துவங்கிய கட்சி கடைசியில் அந்த கட்சி தனித்து விடப்படும்.
பாஜக வெளியேறினால் மற்ற கட்சிகள் வந்துவிடும் என சமய சார்பற்ற கூட்டணியை அமைக்க தான் எடப்பாடி பழனிச்சாமி விரும்பினார். ஆனால் விஜய்க்கு அது புரியவில்லை. அதனுடைய விளைவாக அவர் வேறு வழியில்லை. திமுக காலகாலத்திற்கு ஆள வேண்டும், ஆட்சி நடைபெற வேண்டும் அதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆகவே. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற கட்டாயத்திற்கு வருகிற போது பாஜக கூட்டணி அமைந்துள்ளது.
இந்த முறை திமுக ஆட்சி நிலைத்தால் மகன் ஆட்சி வரும், பேரன் ஆட்சி வரும் என்ற நிலையில் அதிமுகவில் பாராட்டத்தக்க அம்சம் ஒன்று உள்ளது. நான் அதிமுகவை சேர்ந்தவன் இல்லை. ஆனாலும் சொல்கிறேன் வக்பு சட்டம் குறித்து இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அந்த சட்டத்தை எதிர்த்து அதிமுக வாக்களித்துவிட்டு அதற்குப் பிறகு அமித்ஷாவுடன் கூட்டணி சேர்ந்ததெல்லாம் பெரிய விஷயம். பாராளுமன்றத்தில் வாக்களிக்கும் போது அதற்கு முன்னதாகவே அவர் அமித்ஷாவை சந்திக்கிறார்.
எங்களுடன் கூட்டணி சேர வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார். வேறு வழி இல்லை திமுகவை அகற்ற வேண்டும் என்றால் பாஜகவுடன் சேர்ந்து தான் ஆக வேண்டும் என்ற நிலையிலும் கூட அதிமுகவின் பாரம்பரிய வழக்கப்படி என்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான கட்சி என்ற அடிப்படையில் தம்பி துரையை வைத்து பாராளுமன்றத்தில் வக்பு சட்டத்தை எதிர்த்து பேசியதோடு வாக்களித்துள்ளது அதிமுக. அதற்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது அதிமுக. அதனால் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்ட வேண்டும். கூட்டு என்பது வெறும் இட ஒதுக்கீடு. ஒரு மாதத்திற்கு வாக்குகள் சிதற கூடாது என்பதற்காக அமைக்கப்படுவது. கட்சிகள் வேறு வேறு.. கொள்கைகள் வேறு வேறு" என கூறியுள்ளார்.
-
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்!












Click it and Unblock the Notifications