விஜய் இந்த தொகுதியில்தான் களமிறங்குகிறாரா? அவ்வளவு துணிச்சல் இருக்கிறதா! பிரபலம் சொன்ன பதில்!
சென்னை: கரூர் சம்பவத்தில் விஜய் பெயர் பயங்கரமாக அடிப்பட்டிருந்தாலும், கரூரில்தான் விஜய் களமிறங்கப்போகிறார் என்று பேச்சுக்கள் எழுகின்றன. ஆனால் விஜய்க்கு அவ்வளவு துணிச்சல் எல்லாம் கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா கூறியிருக்கிறார்.
ஒன் இந்தியா தமிழ் யூடியூப் தளத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது, "விஜய்க்கு அவ்வளவு துணிச்சல் இருப்பதை போன்று எனக்கு தெரியவில்லை. திருச்சி கிழக்கை குறி வைக்கிறார் எனில் அதில் மைனாரிட்டி வாக்குகள் அதிகம் இருக்கிறது. பிள்ளைமார் வாக்குகளும் இருக்கிறது. இதெல்லாம் தனக்கு சாதகமாக இருக்கும் என்று விஜய் கருதுகிறார். இல்லையெனில் விக்கிரவாண்டியில் தொடங்கி வட மாவட்டங்களை மையப்படுத்தி பிரச்சாரத்தை மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

விஜயகாந்த் விஷயத்தில் வட மாவட்டங்கள் கை கொடுத்திருக்கின்றன. விஜயகாந்த்துக்கு மதுரை சொந்த மண்ணாக இருந்தாலும் அவர் விருதாச்சலத்திலும் ரிஷிவந்தியத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வட மாவட்டங்களில் சினிமாவுக்கான கவர்ச்சி அதிகமாக இருக்கிறது என்றும் அங்கு ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்று நம்பி போட்டியிட்டு இருந்தார். அதேபோல விஜய்யும் வட மாவட்டங்களை நோக்கி நகர்கிறார்.
வட மாவட்டங்களில் சினிமா நட்சத்திரங்கள் களமிறங்கும்போது, வன்னியர் மற்றும் தலித்துகள் வாக்குகள் ஒன்றாக சேர்ந்து பதிவாகும். இது வெற்றிக்கான எளிய சூத்திரம். மற்றவர்கள் போட்டியிடும்போது வாக்குகள் பிரியும். சினிமா நட்சத்திரங்கள் போட்டியிடும்போது அவர்களை சாதி அடையாளத்திற்குள் வட மாவட்ட மக்கள் கொண்டுவர மாட்டார்கள். முன்பு இயக்குநர் தங்கர்பச்சனை பாமக நிறுத்தியது. ஆனால், வெற்றிப்பெறவில்லை. காரணம் அவர் பாப்புலரான ஹீரோ கிடையாது.
இத்தனைக்கும் தனி தொகுதிகளில் பாமக தலித் வேட்பாளரை நிறுத்தும்போது, தலித் வாக்காளர்களே அந்த வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆக, அரசியல், சாதி சாயமற்ற சினிமா நட்சத்திரங்களுக்கு வட மாவட்டங்களில் வாக்குகள் அதிகம் விழும். அந்த வகையில் விஜய் கரூரில் போட்டியிடுவார் என்பதற்கு வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு துணிச்சலான முடிவை விஜய் எடுக்க மாட்டார். கரூரில் ஏற்கெனவே அதிமுக சார்பில் எம்.ஆர்.விஜய பாஸ்கர் போட்டியிட ரெடியாக இருக்கிறார். அவர்கள் தேர்தல் செலவுகளுக்கு பணத்தை இறக்கவும் தயாராக இருக்கிறார். கரூர் தொகுதி இந்த முறை உக்கிரமாக இருக்கப்போகிறது. எனவே விஜய் இதில் தனியாக சிக்கிக்கொள்ள மாட்டார்.
விஜய் புதிய டிரெண்ட் செட்டிங்கை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். ஜெயலலிதா இருந்த போது பொது தொகுதியில் தலித் வேட்பாளரையும், இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதியில் இந்து வேட்பாளரையும் களமிறக்கியிருக்கி வெற்றி பெற வைத்தார். என்னால்தான் இவர்கள் ஜெயிக்கிறார்கள் என்பதை அவர் காட்ட நினைத்தார். அதேபோல வேட்பாளர்களை நிறுத்தவதில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என விஜய் திட்டமிட்டிருக்கிறார்.
சாதி, மதத்தை வைத்து தனக்கு ஓட்டு போட மாட்டார்கள். அதை தாண்டிய வாக்கு வங்கி தனக்கு தேவை என்று நினைக்கிறார். எனவே வேட்பாளர்களை நிறுத்துவதில் மாற்றத் எதிர்பார்க்கலாம்" என்று கூறியிருக்கிறார்.
-
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
இது மட்டும் நடந்தால்..அடுத்ததும் விஜய் தான் சிஎம்! மகளிருக்கு மாதம் ரூ.2,500.. கோட்டையில் பரபர ப்ளான் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
எந்தவித ஊழல் மற்றும் கமிஷன் குற்றச்சாட்டு இல்லை... முதல்வர் விஜய்யை பாராட்டிய வைகோ -
இனி கோவில்களில் உள்ள கடைகளில் அதிக விலைக்கு விற்றால் அபராதம், உரிமம் ரத்து.. அறநிலையத்துறை அதிரடி! -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
கோயில் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு.. விலைப்பட்டியல் கட்டாயம்.. அமைச்சர் ரமேஷ் உத்தரவு -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்?











Click it and Unblock the Notifications