ஓரங்கட்டப்பட்டாரா விஜய்யின் வலது கை? ஜான் ஆரோக்கியசாமி ஏன் அந்த விருந்தில் இல்லை? ஆதவ் அர்ஜுனா செக்?
சென்னை: தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது நடிகர் விஜய்யின் தவெக.. இப்போதுதான் முதல் தேர்தலை சந்திக்க போகிறார்கள்.. ஆனால் தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கு முன்பாகவே உட்கட்சி பூசல்களையும், அதிகார போட்டிகளையும் சந்திக்க தொடங்கியுள்ளது.. அப்படித்தான் ஜான் ஆரோக்கியசாமி பற்றின செய்தி ஒன்று இணையத்தில் பரபரத்து வருகிறது...
தவெக கட்சியின் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் ஆரம்பத்தில் இருந்தே முக்கிய பங்காற்றி கொண்டிருப்பவர் ஜான் ஆரோக்கியசாமி.. ஆனால் தவெகவில் சமீபத்தில் இணைந்தவர் ஆதவ் அர்ஜுனா..

இவர்கள் இருவருக்கும்தான் பனிப்போர் முட்டி மோதி கொண்டிருந்தது.. இப்போது பகிரங்கமாகவே தெரிய தொடங்கியுள்ளது. இது அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் ஆரம்ப காலத்திலிருந்தே விஜய்க்கு அரசியல் ரீதியான ஆலோசனைகளையும், தேர்தல் வியூகங்களையும் வழங்கி வந்தவர் ஜான் ஆரோக்கியசாமி. ஒரு கட்சியின் அறிக்கை முதல் நிர்வாகிகளின் பேட்டி வரை அனைத்தும் தனது திட்டமிடலின் கீழ் மட்டுமே இருக்க வேண்டும் என்ற பிடிவாதமான கொள்கையை கொண்டவரும்கூட..
ஆதவ் அர்ஜூனா
ஆனால், ஆதவ் அர்ஜுனாவின் வருகையானது, இந்த அதிகார மையத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது விஜய்யின் நம்பிக்கைக்குரிய ஒருவராக ஆதவ் அர்ஜுனா உருவெடுத்துள்ள நிலையில், ஜான் ஆரோக்கியசாமி ஓரங்கட்டப்படுவதாக உணர்கிறாராம்..இதுவே அவர் தற்போதைய கட்சி பணிகளில் இருந்து மெல்ல விலகி நிற்பதற்கு காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
தேர்தல் பணிகளுக்காக தொடங்கப்பட்ட "வாய்ஸ் ஆப் காமன்ஸ்" அலுவலகத்தில் ஜான் ஆரோக்கியசாமியின் குழுவினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது விஜய்யின் விருப்பமாக இருந்தது.
ஆனால், அங்கு நிலவிய சூழல் மற்றும் அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, ஜானின் குழுவினர் ஒட்டுமொத்தமாக அந்த அலுவலகத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. இது நிர்வாக ரீதியாக பெரிய பிளவை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது..
பிரம்மாண்ட விருந்து
அதுமட்டுமல்ல, கட்சியின் 3ம் ஆண்டு விழாவின்போது ஆதவ் அர்ஜுனா அளித்த பிரம்மாண்ட விருந்தில் கட்சியின் முக்கிய புள்ளிகள் அனைவரும் கலந்துகொண்ட நிலையில், ஜான் ஆரோக்கியசாமி மட்டும் அந்த நிகழ்வை தவிர்த்தது, விரிசல் எந்த அளவிற்கு பெரியதாக இருக்கிறது என்பதற்கு உதாரணமாகவும் திகழ்கிறது..
இதனிடையே, ஆதவ் அர்ஜுனாவின் தன்னிச்சையான செயல்பாடுகளும், மேடைப் பேச்சுகளும் விஜய்க்கு ரொம்பவே பிடித்து போய்விட்டதாம்.. இதுவும் ஜானுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. தனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு அதிகார மையத்தை ஜான் விரும்புவதில்லையாம்.
இதெல்லாம் உட்கட்சி பூசல்கள் என்றாலும், தேர்தல் நெருங்கும் சூழலில் இப்படியான சலசலப்புகள் கட்சியின் வெற்றியை கண்டிப்பாக பாதிக்கக்கூடும் என்ற கவலைகளும் தவெக தொண்டர்களுக்குள் எழுந்துள்ளன.
விலகுகிறாரா ஜான் ஆரோக்கியசாமி
தற்போது நிலவும் சூழலை பார்க்கும்போது, ஜான் ஆரோக்கியசாமி விரைவில் தமிழக வெற்றிக் கழக முகாமிலிருந்து முழுமையாக விலகுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.. அப்படி விலகினால் விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை..
விஜய்யின் இந்த அரசியல் நகர்வுகள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
ரூ. 20 லட்சம் கடன் தருவோம்.. இளைஞர்களை ஈர்க்க மேஜர் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த தவெக தலைவர் விஜய்! -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
கலைஞரே 2 தொகுதில போட்டி போட்டு இருக்கார்.. யூடியூபர் பிரசாந்த் சொன்ன புது மேட்டர்.. உண்மை என்ன? -
அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டிருக்கிறேன்.. தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் உருக்கம் -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
விஜய் காரை மறித்த அஜிதாவுக்கு சீட் இல்லை.. நடிகர் ஸ்ரீநாத்திற்கு தூத்துக்குடியில் போட்டியிட சான்ஸ்! -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா? -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
ஜனநாயகன் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்.. ரஜினிக்கு பயந்து இந்த முடிவா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications