பரந்தூர் விஜயத்தால் பக்கா வரவேற்பு! விஜய்யின் அடுத்த டார்கெட் இது தான்! ஒரே கல்லில் மூன்று மாங்காய்!
சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை விஜய் சந்தித்து பேசியது தேசிய அளவில் விவாதமாக மாறியது. இந்த நிலையில் இரண்டாவது அரசியல் களப் பயணமாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் செல்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். பிப்ரவரி மாதத்தில் கட்சியின் தொடக்க விழா நடைபெற இருக்கும் நிலையில் அதை ஒட்டி அவரது பயணம் இருக்கும் என்கின்றனர் அவரது கட்சியினர்.
மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து பலத்த விமர்சனங்களை சந்தித்து வந்த நிலையில் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் அவரது செயல் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்து வருவதாக தன்னை விமர்சித்தவர்கள் எல்லாம் தற்போது தனது முதல் அரசியல் களப் பயணம் குறித்து ஏதோ ஒரு வகையில் பேசி வருவதை கண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்.
மேலும் 900 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி வந்த போதும் விளக்கம் எதுவும் கொடுக்காத தமிழக அரசு, தனது பயணத்தின் அடுத்த நாளே பரந்தூர் ஒரு விமான நிலைய திட்டம் எந்தவித பிரச்சனையும் இன்றி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என அறிவித்திருப்பதை கண்டு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். கடந்த சில நாட்களாகவே விஜய் மற்றும் அவரது கட்சி குறித்து பல்வேறு யூகங்கள் பொதுவெளிகளில் உலா வந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஒரே நாளில் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி அரசியல் களத்தில் தானும் ஒரு முக்கிய சக்தி தான் என நிரூபித்ததாக கூறுகின்றனர் அவரது கட்சியினர்.

இதற்கிடையே அடுத்த அரசியல் களப் பயணத்திற்கு தயாராகி வருகிறது விஜய் தரப்பு. ஏற்கனவே தமிழகம் முழுவதும் மாவட்ட ரீதியாக மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த பட்டியல் தயாராகி விஜய் தரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் முதல் இடத்தில் இருந்தது வேங்கை வயல். ஆனால் தனது படங்களில் விவசாயிகள் குறித்து பேசி வந்ததால் அதிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என்பதற்காகவே பரந்தூரை விஜய் தேர்வு செய்தார்.

இந்த நிலையில் முதல் அரசியல் களப்பயணத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பயணத்தை மேற்கொள்ள இருக்கும் விஜய் இந்த முறை வேங்கைவயலை தேர்ந்தெடுத்து இருக்கிறார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதுவரை வேங்கை வயல் குறித்து பேசி வந்தாலும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. டிஎன்ஏ சோதனை வரை சென்று குற்றவாளிகளை நெருங்க முடியாததால் போலீஸ் தரப்பும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
பல்வேறு விவகாரங்கள் தமிழகத்தில் தோன்றி மறைந்தாலும் வேங்கை வயல் பிரச்சனை இன்னும் பேசு பொருளாகவே இருக்கிறது. இந்த நிலையில் அதனை ஒட்டி தனது பயணம் இருக்க வேண்டும் என விரும்பியுள்ள விஜய் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரப்பட்டுள்ளார். இதை அடுத்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறுவது, மக்களை சந்திக்கும் இடத்தை தேர்வு செய்வது என பரபரப்பாகி உள்ளது தமிழக வெற்றிக்கழகம். இன்னும் ஓரிரு நாட்களில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து விஜய் வேங்கை வயல் செல்ல அனுமதி கடிதம் வழங்க இருக்கின்றனர்.

மேலும், பிப்ரவரி மாதத்தில் தான் நடிகர் விஜய் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த வகையில் வேங்கை வயல் பிரச்சனைக்கு குரல் கொடுத்தது போலும் ஆகிவிட்டது, கட்சி தொடக்க விழாவின் போது மக்களை சந்தித்தது போலும் ஆகிவிட்டது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க காத்திருக்கும் விஜய் அதற்காக ஏற்பாடுகளை தீவிர படுத்த நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பிப்ரவரி மாதத்தில் தான் நடிகர் விஜய் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த வகையில் வேங்கை வயல் பிரச்சனைக்கு குரல் கொடுத்தது போலும் ஆகிவிட்டது, கட்சி தொடக்க விழாவின் போது மக்களை சந்தித்தது போலும் ஆகிவிட்டது, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக களத்துக்கு சென்ற தலைவர் விஜய் என தலித் மக்கள், ஆதரவாளர்கள் இடையே தன்னை நிலை நிறுத்த உதவும் என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க காத்திருக்கும் விஜய் அதற்காக ஏற்பாடுகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications