விஜய்க்கு கைகொடுக்குமா ‘வி’ செண்டிமெண்ட்? தவெக மாநாட்டின் தாக்கம் என்ன? அட்டகாசமான 5 பாயிண்ட்கள்!
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் விஜயின் பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. ஒருபுறம் விஜய்க்கு ஆதரவாகவும் மறுபுறம் விஜய்க்கு எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜயின் பேச்சிலிருந்து தமிழக அரசியலில் ஏற்பட்ட ஐந்து முக்கிய தாக்கங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்..
தமிழகம் முழுதுமே நேற்று செய்தி சேனல்கள் முன்னர் தான் அமர்ந்திருந்தது. பலர் செல்பேசியில் மூழ்கிக் கிடந்தனர். காரணம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி-சாலை பகுதியில் நடைபெற்றது.

மாநாட்டில் முகத்தில் புன்னகை ததும்ப லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரத்திற்கிடையே ராம்ப் வாக் வந்த விஜய், அவர்களது உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டதோடு அவர்கள் வழங்கிய துண்டை தனது தோளில் போட்டுக்கொண்டு நடந்தார்.
இத்தனை நாள் பொது மேடைகளில் அமைதியாகவும் சிரித்த முகத்துடனும் பேசி வந்த விஜயா இவர் என்பது போல் தான் இருந்தது அவரது பேச்சும் நடவடிக்கைகளும்.. குரலை உயர்த்தியும் ஆவேசமாகவும் கைகளை உயர்த்தி விஜய் பேசியது தற்போது சமகால அரசியல்வாதிகள் சிலரை போலவே இருந்தது. மேலும் சர்க்கார் படத்தின் கிளைமாக்ஸ்-ல் பேச வேண்டிய வசனங்களை மாநாட்டில் பேசியது போலவும் இருந்ததாக சிலர் விமர்சிக்கின்றனர்.
எது எப்படியோ தற்போதும் நேற்றும் விஜய் குறித்த விவாதங்கள் தான் அனைத்து தளங்களிலும் இருக்கிறது. தொலைக்காட்சி விவாதங்கள், சமூக வலைதளங்கள், ஏன் டீக்கடைகளில் கூட விஜயின் கட்சி மற்றும் அவரது மாநாடு பேச்சு குறித்து தான் இருக்கிறது. இந்த நிலையில் விஜய் பேச்சிலிருந்து தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள தாக்கங்களின் ஐந்து முக்கிய பாயிண்டுகளை பார்க்கலாம்..
அரசியல் உற்சாகம்: தமிழக வெற்றி கழக தலைவராக விஜய் எப்படி செயல்பட போகிறார்? எப்படி பேசுவார்? என எதிர்பார்த்து காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு நேற்றைய நாள் உற்சாகம் மிக்கதாக இருந்தது. வழக்கமாக மேடைகளில் கையசைத்து விட்டுப் போகும் தலைவர்கள் போல் அல்லாமல் மேடையில் அனைத்து பகுதிகளுக்கும் சென்றதும், சுமார் 800 மீட்டர் நடைபாதையில் நடந்து சென்று தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டதும், படத்தில் பார்த்த விஜய் நிஜத்தில் பஞ்ச் டயலாக் பேசியதும், விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
40 வயதை கடந்தவர்களுக்கு வேண்டுமானால் விஜய்யின் பேச்சு விமர்சனத்திற்கு உள்ளாக்கலாம். ஆனால் 25 வயது உட்பட்ட விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த பேச்சு ஒரு புதிய உற்சாகத்தையும் தெம்பையும் கொடுத்திருக்கிறது. மேலும் விமர்சன அரசியலில் தான் இருக்கப் போவதில்லை, அதே நேரத்தில் விமர்சனங்கள் வராமல் இருக்கப் போவதில்லை என படத்தில் வருவது போல விஜய் பேசியது கவனிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக பூவே உனக்காக படத்தில் பார்த்த விஜய் ரசிகர்களுக்கு இந்த பேச்சு மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருக்கும் என்பது உண்மை..
மக்களின் கவனம் ஈர்ப்பு: நேற்றைய விஜய் மாநாடு மீது மக்கள் கவனம் செலுத்தியதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். மாலை நான்கு மணியில் இருந்து அனைத்து வீடுகளிலும் டீக்கடைகளிலும் செய்தி சேனல்களிலும் செல்போன்களின் யூடியூப்பில் லைவாகவும் விஜய்யின் மாநாடு செய்திகள் தான் ஓடிக்கொண்டிருந்தது. ஆதரவாளர்களோ எதிர்ப்பாளர்களோ யாராக இருந்தாலும் விஜயின் மாநாட்டை நிச்சயம் பார்த்திருப்பார்கள்.
அந்த வகையில் விஜயின் அரசியல் மாநாடு நிச்சயம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கூட்டணி வாய்ப்புகள்: விஜயின் பேச்சு 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து இருந்தது. தேர்தல் ஆணையம் குறிக்கும் அந்த நாள் நமது இலக்கு என விஜய் பேசி இருந்தார். அதே நேரத்தில் திமுகவையும் பாஜகவையும் விமர்சித்ததன் மூலம் அவர்களோடு கூட்டணி இல்லை என மறைமுகமாக மெசேஜ் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என பேசி இருப்பது, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கான கூட்டணி அழைப்பாகவே பார்க்கப்படுகிறது. எனவே 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணி போல புதிய கூட்டணி ஒன்றும் உருவாகலாம்..
சமூக ஊடக விவாதங்கள்: விஜயின் மாநாடு நேற்றே முடிந்து விட்டாலும் இன்றும் விஜய் மாநாடு தொடர்பான வீடியோக்களும், விமர்சனங்களும், கருத்துக்களும், ஆதரவு பேச்சுகளும் சமூக வலைதளங்கள் முழுவதும் ஆக்கிரமித்து இருக்கிறது. பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் என எங்கு பார்த்தாலும் விஜய் குறித்த பேச்சுகள்தான். அது ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இருக்கலாம். ஆனால் 10 செய்திகளில் எட்டு செய்திகள் விஜய் குறித்தே இருக்கிறது. இது மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக நல்லிணக்கம்: விஜயின் பேச்சு அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையிலேயே இருந்தது. பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் அவரது கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்க மாட்டோம், அனைத்து மத வழிபாட்டு உரிமைகளையும் பாதுகாப்போம் என விஜய் பேசி இருப்பது தன்னை ஒரு சமூக நல்லிணக்க தலைவராக நிலை நிறுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு. அதேபோல எந்த சாதி மத அமைப்புகளையும் உயர்த்திப் பேசாமலும் தாழ்த்தி பேசாமலும் அனைவரும் சமம் எல்லோருக்கும் எல்லாம் என்ற விஜயின் பேச்சு அனைத்து தரப்பினரையும் கவனிக்க வைத்திருக்கிறது. இதனால் ஒரு சாதி அல்லது மத ஆதரவாளராக விஜய் தன்னை காட்டிக் கொள்ளவில்லை. இது வருங்கால அரசியலுக்கு நிச்சயம் அவருக்கு உதவிகரமாக இருக்கும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications