சமூக நீதி.. மதச்சார்பின்மை.. திமுகவின் அதே கொள்கை.. பாஜகவிற்கு எதிராக விஜயின் அரசியல் ஸ்டாண்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும்.. இன்னொரு சமூக நீதி.. மதச்சார்பின்மை.. கொள்கை கொண்ட கட்சி உருவாகி உள்ளது. மதம், மொழி , சாதி, இனம் ஆகியவை மூலம் பாகுபடுத்தப்படாத கொள்கையான சமூக நீதி.. மதச்சார்பின்மை கொள்கை தமிழ்நாட்டில் பல கட்சிகளின் கொள்கையாக இருந்து வருகிறது.
அந்த வகையில்.. தமிழ்நாட்டில் ஏற்கனவே திமுக இந்த கொள்கையை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது. அதிமுகவும் இந்த கொள்கையை கொண்டே உருவாக்கப்பட்டது. விசிக, மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் இதே கொள்கையுடன் உருவாக்கப்பட்டது. பாஜகவின் வலதுசாரி கொள்கைக்கு எதிராக இந்த கொள்கைகள் அமைந்து உள்ளன.

இப்படிப்பட்ட நிலையில் அதே கொள்கையுடன் தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கி உள்ளது. அதன்படி திருவள்ளுவர், அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் உட்பட 6 பேர் அரசியல் வழிகாட்டிகள் என்று நடிகர் விஜய் அறிவித்து உள்ளார்.இந்த ஐந்து தலைவர்களின் கொள்கை அடிப்படையில் கட்சி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் அதிகார்பூர்வ கொள்கையாக மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இவை வரிகளாக எழுதப்பட்டு காட்சிகளாக திரையில் வைக்கப்பட்டு உள்ளது.
அதோடு தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் தந்தை பெரியார் விஜய்க்கு வழிகாட்டி அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. பெரியாரை முன்னிறுத்தி தமிழக வெற்றி கழகம் தனது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க உள்ளதை தெளிவுபடுத்தி உள்ளது.
பெரியார் மரியாதை: முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. பெரியாருக்கு மாலை அணிவித்து உள்ளார். விஜய் தொடக்கத்திலேயே கட்சி தொடங்கும் அறிக்கையில் பெரியார், அம்பேத்கர் பெயரை பயன்படுத்தினார். அதுவும் கொள்கை மதசார்பற்ற கட்சி கொள்கை என்பதையே காட்டியது.
இப்போது அதன்படியே அவரது கட்சியின் அதிகார்பூர்வ கொள்கையாக மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாஜகவிற்கு எதிராக விஜயின் அரசியல் பயணம் தமிழ்நாட்டின் இருக்கும்.. அவரின் அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்காது என்பது உறுதியாகி உள்ளது.
உறுதிமொழி: முன்னதாக
நடிகர் விஜய் மாநாட்டு மேடைக்கு வந்ததும்.. கட்சியின் உறுதிமொழி பாடப்பட்டது.
"நமது நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து, வீரத்துடன் போராடி, உயிர் நீத்த எண்ணெற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்;
நமது அன்னைத் தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த, மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில், தொடர்ந்து பாடுபடுவேன்;
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்புள்ள தனி மனிதனாக செயல்படுவேன்;
மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப்பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராக கடமையாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்;
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்;
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன், என்ற தமிழக வெற்றிக் கழக உறுதிமொழி ஏற்கப்பட்டது.












Click it and Unblock the Notifications