விஜய் செய்த பெரிய தவறு.. முதல்வராக்காமல் ஆளுநர் தாமதிப்பது ஏன்? கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அட்வைஸ்
சென்னை: சட்டசபை தேர்தலில் மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்கள் கிடைக்காமல் இருந்தாலும் கூட விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பல மாநிலங்களில் பெரும்பான்மை இன்றி தனிபெரும் கட்சிகள் ஆட்சியமைத்து மெஜாரிட்டியை நிரூபித்து உள்ளன. ஆனால் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் கூட ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி வருகிறார். இதன் பின்னணியில் விஜய் செய்த தவறும், அதனை முக்கிய அஸ்திரவமாக ஆளுநர் பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது. அதோடு இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு, மத்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் முக்கிய அறிவுரையும் வழங்கி உள்ளது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொதுவாக நம் நாட்டில் ஒரு மாநிலத்தில் மெஜாரிட்டி இருந்தால் அந்த கட்சி தலைவர் முதல்வராக பதவியேற்று ஆட்சியை நடத்தலாம். இதற்கு உடனடியாக ஆளுநர் அனுமதி வழங்குவார். ஆனால் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்தால் ஆட்சி அமைப்பதில் தனிப்பெரும் கட்சியை (இருப்பதில் அதிக இடங்களை வென்ற கட்சி) தான் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பார். அந்த கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கலாம். இதுதான் மரபு.

அந்த வகையில் தமிழகத்தில் 118 என்ற மெஜாரிட்டி இடங்களில் எந்த கட்சியில் வெல்லவில்லை. விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றள்ளது. இதில் விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் ஒன்று காலியாகிறது. இதனால் சட்டசபை எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 233 ஆக குறைந்து மெஜாரிட்டி நம்பர் 117 ஆக சரிகிறது. இப்போது காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றுள்ளது. இதனால் தவெக பலம் 112 (விஜய்யை ஒரு தொகுதி எம்எல்ஏவாக மட்டும் கருத வேண்டும்) எம்எல்ஏக்களாக உயர்ந்துள்ளது. இன்னும் 5 பேர் தேவையாக உள்ளது.
இதனால் தான் தவெக 2 கம்யூனிஸ்ட், விசிகவின் 6 எம்எல்ஏக்களின் ஆதரவை கோரி வருகிறார். அவர்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி மெஜாரிட்டியை நிரூபித்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உறுதியாக சொல்லிவிட்டார். இதனால் தவெக தவித்து வருகிறது. இந்த தவிப்புக்கு விஜய் செய்த ஒரு தவறு தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது விஜய் தான் தனிப்பெரும் கட்சி என்று தனது கட்சி எம்எல்ஏக்கள் 107 பேரின் ஆதரவு கடிதத்தை மட்டும் ஆளுநரிடம் வழங்கி இருக்க வேண்டும். அப்படி வழங்கியிருந்தால் நிச்சயம் ஆளுநர் அவரை முதல்வராக்கி இருப்பதோடு, அடுத்த சில நாட்களில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கூறியிருப்பார். அப்போது காங்கிரஸ் உள்பட பிற கட்சிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று பெரும்பான்மையை விஜய் நிரூபித்து இருக்கலாம்.
ஆனால் விஜய் ஆளுநரிடம் தவெகவின் 107 எம்எல்ஏக்கள் + காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 112 பேரின் கடிதத்தை வழங்கி உள்ளார். இதுதான் பிரச்சனையாக உள்ளது. இப்படி விஜய் கூறியதால் கூட்டணி ஆட்சி அமைகிறது என்ற பொருள் வருகிறது. இதனால் கூட்டணி ஆட்சி எனும்போது மெஜாரிட்டிக்கு தேவையான 117 இடங்கள் வேண்டும் என்று ஆளுநர் நினைக்கிறார். இதனால் தான் மெஜாரிட்டி எங்கே? மீதமுள்ள 5 எம்எல்ஏக்கள் எங்கே? அவர்களின் ஆதரவை பெற்று வந்து முதல்வராக பதவியற்று கொள்ளுங்கள் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தான் விஜய்யின் விவகாரம் பற்றி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டதாக நாம் நேற்று செய்தி வெளியிட்டு இருந்தார். இந்த வேளையில் மத்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் முக்கிய விஷயத்தை ஆளுநரிடம் தெரிவித்துள்ளார். அதாவது தவெக தனிப்பெரும் கட்சியாக உரிமை கோரவில்லை. கூட்டணி என்பதால் 118 பேரின் ஆதரவு அவசியம். விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றதால் 117 எம்எல்ஏககள் வேண்டும். அப்போது தான் ஆட்சியை பிடிக்க முடியும். புதிய முதல்வர் பதவியேற்க முடியும் என்று கூறியுள்ளார். இதனால் தான் விஜய்யின் ஆட்சி அமைக்க உரிமை கோரியதை இன்னும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஏற்காமல் அவரை காக்க வைத்துள்ளார்.
-
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல் -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அடுத்தடுத்து தவெகவில் இணைவது சரியில்லை.. மா.கம்யூனிஸ்ட் கோபம்












Click it and Unblock the Notifications