நாவடக்கத்துடன் பேசுவது நல்லது.. போஸ் வெங்கட் போட்ட பதிவு.. விஜய்யின் தவெகவினர் அதிரடி பதிலடி
சென்னை: தமிழ்நாட்டிற்கான 2025-26ம் நிதியாண்டு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று கருத்துக்களை தெரிவித்தார்கள். அந்த வகையில் தவெக தலைவரும், நடிகருமான விஜய், கூறும் போது, அரசின் அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை. காரணம், இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே என்று விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் போஸ் வெங்கட் தெரிவித்த கருத்துக்கு தவெகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டிற்கான 2025-26ம் நிதியாண்டு பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்திருந்தார். இந்த பட்ஜெட்டில் பரந்தூர் விமான நிலையம், ராமேஸ்வரம் விமான நிலையம், விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு, மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு விரைவில் விண்ணப்பிக்கும் வசதி, சென்னைக்கு அருகே 2,000 ஏக்கரில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம், தமிழ்நாட்டில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது. பட்ஜெட்டை ஒட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று பட்ஜெட் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அவர் கூறுகையில், "தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் புதிதாக 9 இடங்களில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை. ஈட்டிய விடுப்பு சரண் 15 நாட்கள் வரை பணப்பலன். பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்தைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத் தொகையில் சலுகை என்பது போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம். அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை. காரணம், இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே..
புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரிக் கல்வியின் தரத்தை நிலை நிறுத்த என்ன முன்னெடுப்புகளை எடுக்கப் போகின்றீர்கள்? அடிப்படையான சாலை வசதிகளைக் கவனிக்காமல் அன்புச் சோலை போன்ற போலி அக்கறை காட்டும் வெற்று அறிவிப்பு ஏன்? கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கப்படுவது போல பள்ளி மாணவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லையே ஏன்?ஆசிரியப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு, வெற்றிடங்களை நிஜமாகவே நிரப்பும் அறிவிப்பா? இல்லை. வழக்கம் போலான விளம்பர மாடல் அரசின் வெற்று அறிவிப்பா? என்பது போகப் போகத்தான் தெரியும். அண்ணா பல்கலையைத் தரவரிசையில் மேம்படுத்தும் அறிவிப்பெல்லாம் இருக்கட்டும். முதலில், அண்ணா பல்கலையில் பயிலும் மாணவிகளுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாட்டு அரசின் அறிவிப்பு குறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் விளக்கப்படவே இல்லை. மாறாக, மக்கள் நலன் சார்ந்த எந்த விளக்கமும் இல்லாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு, பரந்தூர் பகுதி விவசாயப் பெருங்குடி மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகவே இருக்கும்.
விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் வாக்குறுதியான கேஸ் மானியம் ரூ.100 வழங்கப்படும் என்பது என்ன ஆனது என்று தெரியவில்லை. அதே போல, பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, வாக்குறுதியில் சொன்னது போல முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மேலும், ரேஷனில் சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளும் என்ன ஆயின என்றே தெரியவில்லை.
பொதுமக்களை வெகுவாகப் பாதிக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படும் மின்சாரக் கட்டணம், மாதம்தோறும் செலுத்தக்கூடியதாக மாற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனதோ? வெற்று விளம்பர அரசுக்கே வெளிச்சம்.
அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் குடியிருப்புகள் கட்டுவது இருக்கட்டும். அரசு ஊழியர்களின் லட்சக்கணக்கான குடும்பங்கள் நலன் சார்ந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முக்கியக் கோரிக்கையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்துவது, பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை. இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும்பான்மையாக ஏதேதோ அறிவிப்புகள் என்று போலித்தனமே அதிகம் உள்ளது. ஆனால், சாதாரண நிலையில் இருக்கும் பொதுமக்கள் நேரடியாகப் பலன் அடையும் அறிவிப்புகள் ஏதும் அற்றதாகவே இருக்கிறது.
விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது. இந்த விளம்பர மாடல் அரசோ தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, தமிழ்நாட்டு மக்களின் நலன்களையே மறந்துவிட்டு ஒரு பட்ஜெட்டை வெளியீட்டுள்ளது. இதுதான் இவர்கள் இருவரும் ஒரே மனநிலை கொண்ட உறவுக்காரர்கள் என்பதற்கான உறுதிப்பாடு ஆகும்.
மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு, இந்த ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம் மக்கள் கொடுக்கும் மிகப் பெரிய பதிலடியாக 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இருக்கும். இதை இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு விரைவில் உணரும்" இவ்வாறு நடிகர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.
விஜய்யின் அறிக்கை கண்டு கொதித்துபோன திமுகவினர் பலரும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். நேரடியாகவும் மறைமுகமாகவும் விஜய்யை விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகரும், திமுக ஆதரவாளருமான போஸ் வெங்கட், விஜய்யை விமர்சிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதில் "தி.மு.க 10 க்கு 10 அறையில் அரசியல் செய்யவில்லை.. இந்திய அளவில் அரசியல் களத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது.. நாவடக்கத்தோடு பேசுவது அழகு.. dream cm 2026 😅😅😅 (unbelievable budget for TN people.. )" என்று கூறியிருந்தார்.
முன்னதாக தத்துவமில்லாத தலைவர்களால வெறும் ரசிகர்கள மட்டும் தான் உருவாக்க முடியும்.. அது நாட்டோட முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது என்று ஒருமுறை பதிவிட்டிருந்தார். அதேபோல் யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம். என்று இன்னொரு முறையும் போஸ் வெங்கட் பதிவிட்டிருந்தார். தற்போது தி.மு.க 10 க்கு 10 அறையில் அரசியல் செய்யவில்லை.. இந்திய அளவில் அரசியல் களத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது.. நாவடக்கத்தோடு பேசுவது அழகு என்று பதிவிட்டுள்ள போஸ் வெங்கட்டிற்கு தவெக நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
விஜய் ரசிகர்கள் பலரும் கருத்துகளை கூறி வருகிறார்கள். ஒரு ரசிகர் வெளியிட்ட பதிவில், இந்திய அளவில் அரசியல் களத்தை மாற்றும் வல்லமை உள்ளவர்களுக்கு, NEET-ஐ ஒழிக்க வல்லமை இல்லையோ... ( நாவடக்கமும், கட்டுப்பாடும், சுயஒழுக்கமும் நாற்காலியில் இருப்போருக்கும் பொருந்தும்... ) என்று கூறியுள்ளார்.
-
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications