சியானுக்கு சிக்கல்! அரிய வகை கிப்பான் குரங்குடன் நடிகர் விக்ரம்! ஈஞ்சம்பாக்கத்தில் வனத்துறை விசாரணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விக்ரம், ஒரு வெளிநாட்டு குரங்குடன் வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையான நிலையில் அவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் முன்னணி நடிகராக இருப்பவர் சியான் விக்ரம். இவர் "என் காதல் கண்மணி" என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து "தந்துவிட்டேன் என்னை", "காவல் கீதம்" போன்ற படங்களில் நடித்தார்.

Vikram rare monkey

எனினும் அவை விக்ரமிற்கு ரசிகர் பட்டாளத்தை கொடுக்கவில்லை. அதன் பிறகு நடித்த "மீரா" திரைப்படம்தான். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து விக்ரம் கவனிக்கப்படும் நடிகராக மாறினார். விக்ரமுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது சேது. அந்த படத்தில் இருந்துதான் அவர் சியான் என அழைக்கப்படுகிறார்.

அதன் பிறகு உடலை வருத்தி பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். கமல்ஹாசனை போல் மெனக்கெடல்களை செய்யக் கூடியவராக மாறினார்.

இவர் நடித்த சாமி படமும் ஹிட்டடித்தது. அதில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், அதே நேரத்தில் திரிஷாவை காதலிக்கும் காட்சிகளில் பிளே பாய் போலும் நடித்திருந்தார்.

ஒரு காலத்தில் அஜித்திற்கு டப்பிங் கொடுத்த விக்ரம், ஐ என்ற படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார். இதையடுத்து "பொன்னியின் செல்வன்" படத்தில் அவர் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இருமுகன் என்ற படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். சியான் 63 என அழைக்கப்படும் அந்த படத்தில் நடிகை ரியா ஷிபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக உடலை ஜிம் பாடியாக மாற்றியுள்ளார். இந்த நிலையில் இந்த படத்திற்கான கெட்டப்களை விக்ரம் தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.

அந்த வகையில் அண்மையில் குரங்குடன் விளையாடும் வீடியோவை விக்ரம் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். குரங்கிடம் பேசிக் கொண்டே அதை போல் முகப்பாவனைகளை மாற்றும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அந்த குரங்கு அரிய வகையானது என சொல்லப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட லார் கிப்பான் என்பது இந்த குரங்கின் பெயர் ஆகும்.

இது தற்போது அழிவின் விளிம்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட அரியவகை உயிரினம் ஆகும். இந்த பாதுகாக்கப்பட்ட வெளிநாட்டு விலங்கை வளர்ப்பது சட்டவிரோதம். அதற்கான உரிய அனுமதியை காவல் துறையிடம் பெற்று அந்த ஆவணங்களுடன் வளர்க்கலாம்.

அப்படியிருக்கும் போது சியான் விக்ரம் அந்த குரங்குடன் இருக்கும் வீடியோ வெளியானதால், அவர் அந்த குரங்கை வளர்க்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த குரங்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விக்ரம் சம்பந்தியின் பண்ணை வீட்டில் வளர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இது போல் சர்ச்சை எழுந்ததும் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து அந்த வீடியோவை நடிகர் விக்ரம் நீக்கியுள்ளார். குரங்கு குறித்த வீடியோ வைரலான நிலையில் வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் ஏற்கெனவே வீட்டில் வளர்க்கும் கிளியுடன் பேசும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இதற்கும் கண்டனங்கள் எழுந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+