விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுகவிற்கு ஆதரவாக களத்தில் காங்கிரஸ்.. தேர்தல் பணிக்குழு அமைப்பு
சென்னை: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் நா. புகழேந்தி. கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு ஜூன் 10 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இத்தொகுதியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை தேர்தல் ஜூலை 10-ல் நடைபெறும் நிலையில் இன்று முதல் (ஜூன் 14) வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்தனர். வேட்பு மனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அதிமுக இன்னும் அறிவிக்கவில்லை. பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெயரை சீமான் வெளியிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளது.
திமுக சார்பாக போட்டியிடும் அன்னியூர் சிவாவிற்கு ஆதரவாக 18 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம் வருமாறு:-
கேவி தங்கபாலு,
இவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ,
எம் கிருஷ்ணசாமி,
திருவாவுக்கரசு,
கேஎஸ் அழகிரி,
எஸ் ராஜேஷ்குமார் எம்எல்ஏ,
டாக்டர் எம்கே விஷ்ணு பிரசாத் எம்பி,
ஆர் சுதா எம்பி,
ஆர் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ,
துரை சந்திர சேகர் எம்எல்ஏ,
டிஎன் முருகானந்தம்,
கே ராணி,
விச்சு (எ) லெனின் பிரசாத்,
ஆர்பி ரமேஷ்,
ஆர்டிவி சீனிவாச குமார்,
முகம்மது குளம் மொய்தீன்,
ரங்கபூபதி,
ஆர் ராஜ்மோகன்
ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications