Exclusive: குடிநீர், மின்சாரம் கூட கிடையாது.. 20 வருடங்களாக ஏங்கும் கிருஷ்ணகிரி பட்டியலின மக்கள்!
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு அருகே இருக்கிறது மருதேரி கிராமம். இந்த கிராமத்தில் எட்டு பட்டியல் இனத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் எல்லோருமே இங்கு தினக்கூலிகளாக கிடைக்கும் வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த எட்டுக் குடும்பங்களுக்கும் இதுவரை மின்சார வசதியோ குடிநீர் வசதியோ கிடையாது. கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா. நினைத்துப் பாருங்கள், அவர்களது வாழ்க்கை எந்தளவு சிரமமாக இருக்கும் என்று. மருதேரி கிராமத்தைச் சேர்ந்த சிலர் இத்தகவலை நமக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, சமீபத்தில் நாம் மருதேரி கிராமத்துக்குப் பயணப்பட்டோம்.
கிருஷ்ணகிரி பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்று. தேசிய நெடுஞ்சாலைகள் வந்தபிறகே, கிருஷ்ணகிரியின் வளர்ச்சி அதிகரித்திருக்கிறது. கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மருதேரி கிராமம். இருபது நிமிட பயணத்தில் மருதேரி கிராமத்தை அடைந்தோம். தென்னை மரங்களுக்கு இடையே அமைந்திருந்த எட்டு வீடுகளில் வசித்து வருகிறார்கள் அந்த மக்கள். மண் தரையுடன் கூடிய கீற்றுக் கொட்டகை அமைத்த வீடுகள். தண்ணீர் குழாய் அமைத்த சிமெண்ட் பெஞ்ச் மட்டும் குழாய் இல்லாமல் அப்படியே இருந்தது. அதுபோல மின்சார இணைப்பு வழங்க மின் இணைப்புக்கு வயர்களும் வீட்டுக் கூரை மேல் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

நம்மை வரவேற்றுப் பேசினார் அவர்களின் முதல் தலைமுறைப் பட்டதாரி சுரேஷ். ''நான் இஞ்சினியரிங் இப்போதான் முடிச்சிருக்கேன். சின்ன வயசுல இருந்தே எங்களுக்கு கரண்ட், தண்ணி எதுவும் கிடையாது. காலேஜ் போய் படிச்சப்பதான் நமக்கு மட்டும் ஏன் எதுவுமே கிடைக்கலன்னு தோனுச்சு, அதுக்கு அப்பறம் வீட்டோட பட்டா எல்லாம் எடுத்துப் பாத்தோம். அரசாங்கம் தான் எங்களுக்கு அந்த பட்டாவே கொடுத்திருக்காங்க. அந்த பட்டா போலியானது. இந்த நிலம் எங்களுக்குத்தான் சொந்தம்னு இதே ஊரை சேர்ந்த சிலர் கோர்ட்ல கேஸ் போட்டிருக்காங்க. அந்த கேஸ் இன்னமும் நடந்திட்டு இருக்கு. இப்போதான் நாங்களும் ஒரு வக்கீல் வச்சு கேஸ் நடத்த ஆரம்பிச்சிருக்கோம்.
எங்க எட்டு குடும்பத்துக்கும் தண்ணி, மின்சாரம் கொடுக்கக் கூடாதுன்னு கோர்ட்ல கேஸ் போட்டு ஸ்டே வாங்கிட்டாங்க. அதனால் கனெக்ஷன் கொடுத்த தண்ணியையும் பிடிங்கிட்டுப் போய்ட்டாங்க. ஈ.பி கனெக்ஷன் கொடுக்க பணமெல்லாம் கட்டியாச்சு, அவங்களும் வயரெல்லாம் கொண்டுவந்து வச்சாங்க, ஆனா இங்க இருக்கவங்க கொடுக்க விடலை. அதோட ஸ்டே இருக்கதால, அவங்களால எதுவுமே பண்ண முடியலை. தொகுப்புத்திட்டத்துல எங்களுக்கு வீடு கட்ட அனுமதி கிடைச்சது, எந்தவிதமான வசதியும் இல்லாததால, எங்களால வீடும் கட்ட முடியலை. எதுவுமே பண்ண முடியாத சூழ்நிலையில இருக்கோம். கலெக்டர் கிட்ட மனு கொடுத்தோம். எதுவும் நடக்கலை. முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்தோம் பதில் கடிதம் மட்டும் வந்துச்சு. ஒன்னுமே நடக்கலை. அடிப்படை வசதி கூட இல்லாம எத்தனை வருஷம் தான் நாங்களும் வாழுறது.
அரசாங்கம் இலவசமா கொடுத்த மிக்ஸி கிரைண்டர், ஃபேன் இப்படி எல்லாமே எங்கக்கிட்ட இருக்கு, ஆனா அதையெல்லாம் பயன்படுத்த மின்சாரம் இல்லாம இருக்கோம். ரேஷன் கார்டு இருக்கு, ஆதார் அட்டை இருக்கு, அதை வச்சு என்ன பண்ண.. என் தம்பி இப்போ படிச்சிட்டு இருக்கான். கொரோனாவால எல்லாரும் வீட்ல இருந்து டி.வி-ல படிக்கிறாங்க. எங்க வீட்ல கரண்ட் இல்லாததால அவனோட எதிர்காலமே கேள்விக்குறியா இருக்கு. அதோட போன் சார்ஜ் போட இன்னொருத்தவங்க வீட்ல போய் போடணும். அவங்களும் எத்தனை நாளைக்குத்தான் போடவிடுவாங்க. ராத்திரில பாம்பெல்லாம் வரதை, மண்ணென்னை விளக்க வச்சித்தான் கவனிக்கிறோம். தண்ணி கனெக்ஷன் இல்லாததால, ஊர் போதுவுல இருக்க பம்ப்ல தான் தண்ணி எடுக்கப் போகணும். அது எங்க வீட்ல இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. மொத்தம் நாலு கிலோமீட்டர் நடந்தாதான் குடிக்க குளிக்கன்னு எல்லாத்துக்குமே தண்ணி கிடைக்கும். அடிப்படைத் தேவைகள் கிடைக்கவே நாங்கள் போராட வேண்டி இருக்கிறது'' என வேதனையுடன் பேசி முடித்தார் சுரேஷ்.
அரசு கொடுத்த பட்டா நிலத்துக்குத்தான் இங்கே சிக்கல் வந்திருக்கிறது. இதுபோன்ற பல வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்கு தமிழக அரசு ஒரு தீர்வு காண வேண்டும். மருதேரி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications