எகிறி அடிக்க ரெடியாகும் வில்லிவாக்கம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆப்பு! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்!
சென்னை: வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் களமிறங்கியிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக தீவிரமாக வேலை பார்த்து வருகிறது.
வில்லிவாக்கத்தை பொறுத்தவரை, தவெக கடந்த காலங்களில் ஓரளவு வேலை பார்த்திருக்கிறது. வேலை எனில், மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பது கிடையாது, மாறாக பொதுமக்களுக்கு பால், முட்டை கொடுப்பது, விஜய் பிறந்த நாள் அன்று அன்னதானம் தருவது என வேலை பார்த்திருக்கிறது.

தவெகவின் நிகழ்ச்சி
இந்த வேலைகளை வைத்துக்கெண்டு வில்லிவாக்கத்தில் ஜெயித்துவிடலாம் என்று தவெக கனவு காண்கிறது. களத்தை பொறுத்தவரை, விஜய்யின் ரசிகர்கள் பரவலாக இருக்கின்றனர். ஆனால், விஜய் பிறந்த நாளுக்கு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மக்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைத்தது கிடையாது. இப்படி இருக்கையில், ஆதவ் அர்ஜுனா எப்படி ஜெயிக்க முடியும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
திமுகவின் பலம்
இதைவிட முக்கியமான விஷயம் வில்லிவாக்கத்தில் திமுக களத்தில் இறங்கி வேலை பார்த்திருக்கிறது என்பதுதான். தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. இதை விட கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், வில்லிவாக்கத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகள் அமைப்பு ரீதியாக பலமாக இருக்கிறது என்பதுதான்.
கூட்டணி பலம்
திமுகவில் சேர்மனாக இருக்கும் கூ.பி.ஜெயின், திமுகவின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் திட்டமிட்டு வேலை பார்த்திருக்கிறார். இதுபோக விசிகவின் அப்புன், சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பகுதி செயலாளர்கள் தங்கள் கட்சியை கிளை அளவில் வளர்த்து வைத்திருக்கிறார்கள். வில்லிவாக்கத்தில் இந்த கட்சிகளின் போராட்டங்களாக இருக்கட்டும், இதர நிகழ்ச்சிகளாக இருக்கட்டும் மக்களிடையே ஆதரவு அதிக அளவில் இருக்கிறது.
இதை வெறுமென தோழமை கட்சிகளின் பலம் என்று மட்டும் பார்க்க முடியாது. தேர்தலில் இது திமுக வாக்கு வங்கியாக அப்படியே மாறும். கடந்த காலங்களில் இங்கு திமுக அதிக முறையும், சிபிஎம் இரண்டு முறையும், காங்கிரஸ் ஒருமுறையும் ஜெயித்திருக்கிறது. எனவே கூட்டணி கட்சிகளின் பலம், திமுகவின் வெற்றிக்கு உதவும்.
ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவு
அதேபோல ஆதவ் அர்ஜுனாவுக்கு பலம் சேர்க்க வேண்டியது ஜே.சி.டி.பிரபாகரனின் ஆதரவாளர்கள்தான். அதிமுக சார்பில் கடந்த 2 முறை பிரபாகர் இங்கு வெற்றி பெற்றிருக்கிறார். இவர் இப்போது தவெகவில் இருப்பதால், அவரது ஆதரவாளர்களின் வாக்குகள் ஆதவுக்கு போக வாய்ப்பு இருக்கலாம். ஆனால், ஜே.சி.டி.பிரபாகர் தவெகவுக்கு வந்ததற்கு காரணம், அவர் மீண்டும் வில்லிவாக்கத்தில் போட்டியிடதான். ஆனால், ஆயிரம் விளக்குதான் அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனவே, அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
எனவே ஜே.சி.டி.பிரபாகரனின் ஆதரவு வாக்குகள் ஆதவ் அர்ஜுனாவுக்கு மாறுமா என்பது டவுட்டுதான். பொறுத்திருந்து பார்ப்போம். களம் பதில் சொல்லும்.
-
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
குதிரை பேரமா? அதெல்லாம் இல்லீங்க.. ஆதவ் அர்ஜுனா சொன்ன விளக்கம்!












Click it and Unblock the Notifications