Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Villivakkam: ஜவ்வாக இழுக்கும் தொகுதி பிரச்சனை! ஆளும் கட்சிக்கு நெருக்கடியா! ஆதவுக்கு பாசிட்டிவ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வில்லிவாக்கத்தில் திமுக அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது. இருப்பினும் தொகுதி பிரச்சனைகளில் உள்ள அதிருப்தி, ஸ்டார் வேட்பாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கு சாதகமாக மாறுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

அப்படியெல்லாம் ஒன்னும் மாறிவிட வாய்ப்பு இல்லை. இருப்பினும் தொகுதி பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கு பயங்கர தலை வலியாக உருவெடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.

Villivakkam

வில்லிவாக்கம் தொகுதி

மத்திய சென்னை மாவட்டத்தில் வரும் வில்லிவாக்கத்தில், ஆதி திராவிட சமூக வாக்காளர்களின் எண்ணிக்கைதான் அதிகம். எனவே வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் உழைப்பாளி மக்கள் இருக்கின்றனர். கடந்த காலங்களை விட, தற்போது வில்லிவாக்கம் நன்கு டெவலப் ஆகியிருக்கிறது. நல்ல திட்டங்களை அரசு அமல்படுத்தியிருக்கிறது.

திமுகவின் செயல்பாடுகள்

குறிப்பாக வில்லிவாக்கம் மார்க்கெட் பகுதியில் காய்கறி கழிவுகள் கொட்டும் இடம் தூய்மைப்படுத்தப்பட்டிருக்கிறது. சாலைகள் தரமானதாக அமைக்கப்பட்டிருக்கிறது. வில்லிவாக்கம் சுரங்க பாதையில் மழைநீர் தேங்கினால் உடனுக்குடன் அகற்றப்படுகிறது. முன்பு சிட்கோ நகர் பிரதான சாலையில் மழைநீர் தேங்கும் பிரச்சனை இருந்தது. இப்போது இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டிருக்கிறது. பாடி மீன் சந்தை கட்டிடம், பார்க்குகள் புனரமைப்பு, புதிய உடற்பயிற்சி கூடங்களை உருவாக்கியது இதெல்லாம் பாசிட்டிவ் விஷயங்கள்.

நெகட்டிவ் விஷயங்கள்

ஆனால், நெகட்டிவ் விஷயங்களும் இருக்கின்றன. என்னதான் சாலைகள் தரமானதாக இருந்தாலும், வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திலிந்து ஐசிஎஃப் வரை செல்லும் சாலையில் குறைந்தது 10 இடங்களிலாவது குண்டும் குழியுமாக இருக்கும். மற்றொரு பிரச்சனை போக்குவரத்து நெரிசல். நியூ ஆவடி சாலையாக இருந்தாலும் சரி, TH சாலையாக இருந்தாலும் சரி போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதிலும் அயனாவரம் சாலையில் பயணிக்க பொறுமை ரொம்பவும் முக்கியம்.

மக்கள் பிரச்சனை

மற்றொருபுறம் வளர்ச்சி திட்டங்கள் என்று சொல்லி மக்களை வெளியேற்றியது. வில்லிவாக்கம் கண்ணாடி பாலம் அமைக்க, ஏரியை புனரமைக்க அதை சுற்றியிருந்த குடிசைவாழ் மக்களை அரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது. இதை எதிர்த்து சிபிஎம், விசிக கட்சிகள் போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. அதேபோல, சாலை விரிவாக்க பணிகளுக்காக மல்லிகை சேரி குடியிருப்பை அப்புறப்படுத்த முயற்சிப்பதும் ஆளும் கட்சி மீதான எதிர்ப்பை அதிகரித்திருக்கிறது.

பேருந்து நிலையம்

வில்லிவாக்கம் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு, சரியான நேரத்தில் அரசு பேருந்துகளை பல இடங்களுக்கும் இயக்க வேண்டும் என்பதுதான். இங்கிருந்து பெசன்ட் நகருக்கு இயக்கப்படும் பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படாதது, பீக் அவர்சில் கூடுதல் பேருந்துகளை இயக்காதது, தென் சென்னைக்கு வேலைக்கு செல்லும் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல இங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு பஸ் கிடையாது.

அதேபோல, அயனாவரம் மார்கெட்டை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.

வெற்றி யாருக்கு?

இதெல்லாம் பிரச்சனையாக இருந்தாலும், அதை திமுக சரி செய்யும் என்று மக்கள் நம்புகின்றனர். ஏனெனில் கடந்த காலங்களில் திமுக கொண்டு வந்திருக்கும் திட்டங்கள் மக்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது. எனவே இந்த அதிருப்பதி ஆதவ் அர்ஜுனாவுக்கு வாக்காக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+