Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கண்ணாடி பாட்டில்கள் வீசப்பட்டதாகவும், இதற்கு திமுகதான் காரணம் என்றும் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருந்தார். ஆனால், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தவெகவினர் என்று உறுதியான நிலையில், இது குறித்து கட்சி தலைமை வாய் திறக்காமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

திரைப்படங்களில் வருவதை போல, சொந்த ஆட்களையே பாட்டில் வீசி தாக்குதல் நடத்த சொல்லிவிட்டு, ஆளும் கட்சியினர் மீது பழிபோடுவது எந்த வகையில் நியாயம்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Villivakkam TVK Tamil Nadu assembly election 2026

வில்லிவாக்கத்தில் சம்பவம்

தவெக சார்பில் நேற்று மாலை வில்லிவாக்கத்தில் பிரச்சார கூட்டம் நடந்தது. விஜய் இதில் பங்கேற்கவில்லை. எனவே சுமாரான அளவில்தான் கூட்டம் இருந்தது. இந்த கூட்டத்தில் இருந்த பெண்கள் மீது, உடைந்த மது பாட்டில்கள் வீசப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது ஆதவ் அர்ஜுனாவை டென்ஷன் ஆக்கியது. எப்படி இப்படி நடக்கலாம்? என்று கொந்தளித்த அவர், இதற்கு காரணம் திமுகதான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

எங்களுக்கும் இப்படியெல்லாம் செய்ய தெரியும். எனவே முதலமைச்சர் இதுபோன்ற செயல்களை நிறுத்த வேண்டும், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பேசியிருந்தார்.

பொங்கிய புஸ்ஸி ஆனந்த்

கட்சியின் மற்றொரு பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், "வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கழக மகளிர் மீது கண்ணாடி துண்டுகள் மற்றும் பாட்டில்கள் வீசித் தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாட்டு மகளிரிடையேயும் மக்களிடையேயும் இருக்கும் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், தமிழக வெற்றிக்கழக தோழர்களை அச்சுறுத்தும் வகையில், பின்புற வாசல் வழியாக, வன்முறையில் ஈடுபட்டாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையம்

பிற அரசியல் இயக்கப் பொதுக்கூட்டத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுபவர்கள், மக்களிடையே நற்பெயரை எடுத்திருந்தால் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வெற்றியைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது. இன்றைய வில்லிவாக்கம் தவெக பொதுக்கூட்டத்தில் பெண்கள் மீது கண்ணாடி பாட்டில் துகள்கள் வீசித் தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். காவல்துறை நேர்மையாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறான கீழ்த்தரமான செயல்களால் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்திவிடலாம் என்று எண்ணுபவர்களுக்கு தமிழக மக்கள் வரும் தேர்தலில் தக்க பதிலடியைத் தருவார்கள்" என்று அறிக்கையெல்லாம் விட்டிருந்தார்.

கைது நடவடிக்கை

சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட போலீசார், இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் தவெக தொண்டர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் செல்போனில் விஜய்யை DP ஆக வைத்திருக்கிறார். அப்படியெனில், இந்த சம்பவம் திட்டமிட்டே செய்யப்பட்டதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

கப்சிப் தவெக

கூட்டம் கட்டுக்கடங்காமல் போகும் போது, அதை ஏன் கட்சி தலைமை முறைப்படுத்தவில்லை? கூட்டத்தில் சொந்த கட்சிக்காரர்களே பாட்டில் வீசியிருப்பது தெரிந்தும் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் ஏன் கட்சியினருக்கு கட்டுப்பாடு விதிக்கவில்லை? பொது ஒழுங்கை பின்பற்ற ஏன் அறிவுறுத்தவில்லை என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+