ஆதவ் அர்ஜுனா துணை முதலமைச்சர்! வில்லிவாக்கத்தில் மேஜிக்! சட்டென சரிந்த திமுக!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் களமிறங்கியிருந்த ஆதவ் அர்ஜுனா, திமுக வேட்பாளரை விட முன்னிலையில் இருக்கிறார்.
வில்லிவாக்கத்தில் திமுக சார்பில் கார்த்திக் மோகன் களமிறங்கியிருந்தார். இந்த தொகுதி பராம்பரியமாக திமுகவின் கோட்டை என்பதால், நிச்சயம் இந்த முறை திமுகதான் ஜெயிக்கும் என்று பலரும் கணித்திருந்தனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூட, திமுகதான் ஜெயிக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கையில் நிலைமை அப்படியே தலைகீழாய் மாறியிருக்கிறது. வில்லிவாக்கத்தில் தற்போது வாக்கு எண்ணிக்கை 3வது சுற்று முடிந்திருக்கிறது.
ஆதவ் அர்ஜுனா 12715
கார்த்திக் மோகன் 9295
என வாக்குகளை பெற்றிருக்கின்றனர். கார்த்திக் மோகனை விட ஆதவ் அர்ஜுனா சுமார் 3420 ஓட்டுகளை கூடுதலாக பெற்றிருக்கிறார். இன்னும் 16 சுற்றுகள் இருக்கின்றன. இடையில் இந்த நிலவரம் அப்படியே மாறவும் செய்யலாம்.
ஒருவேளை தவெக வெற்றிப் பெற்றால் நிச்சயம் ஆதவ் அர்ஜுனா துணை முதலமைச்சர் பதவியைதான் கேட்பார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. அதேபோல, தற்போது தவெக 108 தொகுதிகளில் தமிழ்நாடு முழுவதும் பெரும்பான்மை பெற்றிருக்கிறது. எனவே, வெற்றி உறுதியானால் ஆதவ் அர்ஜுனா நிச்சயம் துணை முதலமைச்சர் ஆவார் என்று சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications