தலைகீழாய் மாறப்போகும் வில்லிவாக்கம்.. திமுகவின் மெகா பிளான்! ஆதவ் அர்ஜுனா கதை ஓவர்!
சென்னை: வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆதவ் அர்ஜுனா களமிறங்கியிருக்கிறார். எனவே இந்த தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறியிருக்கிறது. என்னதான் ஆதவ் அர்ஜுனா ஸ்டாராக இருந்தாலும், கள யதார்த்தம் திமுகவைதான் முன்னிறுத்துகிறது.
திமுக சார்பில் கார்த்திக் மோகன் வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வரும் இவர், கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளன.

வில்லிவாக்கத்தின் நிலை
வில்லிவாக்கம் உழைப்பாளர் மக்கள் அதிகம் உள்ள தொகுதி. எனவே மற்ற தொகுதிகளில் கொண்டுவரப்படுவதை போல, விளையாட்டு திடல்கள், டிஜிட்டல் நூலகம் உள்ளிட்டவை கொண்டுவரப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த எதிர்பார்ப்பை திமுக கடந்த காலங்களில் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறது.
உலகத் தரம் வாய்ந்த நூலகம்
குறிப்பாக அகத்தியர் நகரில் கொண்டுவரப்பட்ட விளையாட்டு கூடம், வில்லிவாக்கம் ஏரியில் அமைக்கப்பட்ட கண்ணாடி பாலம் உள்ளிட்டவை மக்களிடம் கவனம் பெற்றிருக்கின்றன. இந்நிலையில், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த 5 ஆண்டுகளில் கொண்டுவரப்படும் திட்டங்கள் குறித்தும் மோகன் லிஸ்ட் போட்டிருக்கிறார்.
விளையாட்டு மைதானம்
குறிப்பாக, அயனாவரத்தை விளையாட்டு ஹப்பாக மாற்ற முயற்சிப்போம். உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தி தருவோம் என்று மோகன் கூறியிருக்கிறார். இது மிக முக்கியமான அறிவிப்பு. காரணம் அயனாவரம் மக்கள் தொகை அடர்த்தி அதிகம் இருக்கும் பகுதியாகும். இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். ஆனால், விளையாட்டு மைதானம் கிடையாது. சோலையம்மன் கோயிலுக்கு சொந்தமான இடங்களிலும், பூங்காக்களிலும்தான் விளையாடி வருகின்றனர்.
முக்கிய அறிவிப்புகள்
அதேபோல வில்லிவாக்கம் மெட்ரோ அருகில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் மற்றும் அறிவுத்தளம் அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார். வில்லிவாக்கத்தில் நூலகம் தற்போது தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதுவும் முதல் மாடியில் இயங்கி வருகிறது. இதனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் நுலகத்தை பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. இப்படி இருக்கையில், உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.
டாஸ்மாக் கடை
இது தவிர, பாபா நகர், ஜெகந்நாதன் நகர் ஆகிய பகுதிகளில் சர்வதேச தரத்திலான பூங்காக்கள் அமைக்கப்படும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். ஒவ்வொரு வார்டிலும் இளைஞர்களுக்கு உதவிகள் கிடைக்கும். தொழில்முனைவோருக்கான ஹப்கள் கொண்டு வரப்பட்டு உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படும். வடக்கு ரெட் ஹில்ஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக்கை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற வாக்குறுதிகளையும் கொடுத்திருக்கிறார்.
இது வில்லிவாக்கம் தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்கு மத்தியில் ஆதவ் அர்ஜுனா இப்படியான எந்த பெரிய அறிவிப்பையும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications