வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது?
சென்னை: வில்லிவாக்கம் தொகுதியில் களமிறங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர், ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.
வில்லிவாக்கம் உழைப்பாளி மக்கள் நிறைந்த தொகுதி. இந்த தொகுதியில் பெரும் பணக்காரரான ஆதவ் அர்ஜுனா களமிறங்கியிருப்பது முரண்பட்ட விஷயம்தான்.

வில்லிவாக்கத்தின் தன்மை
சென்னையில் திமுக வலுவாக உள்ள தொகுதிகளில் வில்லிவாக்கமும் ஒன்று. பாடி பகுதியில் புதியதாக வந்த மீன் மார்கெட்டாக இருக்கட்டும், புதியதாக திறக்கப்பட உள்ள கண்ணாடி பாலம் பூங்காவாக இருக்கட்டும், அகத்தியர் நகர் பெண்கள் விளையாட்டு திடலாக இருக்கட்டும், அனைத்தும் திமுகவுக்கு பாசிட்டிவான விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால், வில்லிவாக்கத்தில் பிரச்சனைகளே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.
பிரச்சனைகள் என்ன?
சிட்கோநகர் குடிநீர் பிரச்சனை, வில்லிவாக்கம் முழுவதும் அள்ளப்படாமல் உள்ள குப்பைகள், சாலை விரிவாக்கம் இல்லாததால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், குண்டும் குழியுமான சாலைகள், குறுக்கே வரும் மாடுகள் உள்ளிட்ட பிரச்சனைகளால் வில்லிவாக்கம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கண்டுக்கொள்ளாத தவெக
குறிப்பாக கண்ணாடி பாலத்திற்காக அண்ணை சத்யா நகர் பகுதியிலிருந்து நீக்கப்பட்ட குடியிருப்புகளும், ஓட்டேரி நல்லா கால்வாய் மூடப்படாமல் இருப்பதால் அகத்தியர் நகர் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனையும், மல்லிகைசேரி குடியிருப்புகள் அகற்றமும் ஆளும் கட்சி மீதான அதிருப்தியாக வெடித்திருக்கிறது. இதுதான் தவெகவின் வளர்ச்சிக்கு காரணமாக மாறியிருக்கிறது. இதற்கு முன்னர் மக்களுக்காக தவெகவினர் எந்த பெரிய போராட்டங்களையும் நடத்தவில்லை என்றாலும், ஆளும் கட்சி மீதான அதிருப்தியை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
எதிர்ப்பு வாக்குகளுக்கு குறி
ஆதவ் அர்ஜுனாவுக்கான ஆதரவும் இங்கிருந்துதான் தொடங்குகிறது. ஆதவ் வந்தாலும் இங்கிருக்கும் அடிப்படை பிரச்சனைகள் எதுவும் சரியாகிவிடப்போவதில்லை, ஆனால் எதிர்பு வாக்குகளை தன்வயப்படுத்திக்கொள்வதில் தவெக தீவிரமாக இருப்பதால் வில்லிவாக்கத்தில் காலூன்றிவிடலாம் என ஆதவ் கணக்குபோட்டு வருகிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications