தமிழ்நாடே திணறுதே.. "இந்த 2" பொருளின் விலையும் திடீர் உயர்வு.. பிள்ளையார் சதுர்த்தி வேற கிட்ட வருது
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கிவரும் நிலையில், 2 பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துவிட்டதாம்.. இதுகுறித்து வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவானது, வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் முதல் ஒரு வார காலத்துக்கு சிலைகள் பூஜை செய்யப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சிலை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

பூஜைகள்: வழக்கமாக, கிராமப்புற பகுதிகளிலும், நகர் பகுதிகளிலும் பலவிதமான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு 3 நாட்கள் 5 நாட்கள், 10 நாட்கள் வரை பூஜை செய்து தங்கள் ஊர்களில் உள்ள நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அந்தவகையில், வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, இறுதியில் கடலில் கரைக்கப்படுகிறது.
இதற்காக, போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளை தொடங்கிவிட்டார்கள்.. சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 1500 சிலைகள் வைக்கப்பட உள்ளன. அது தொடர்பானபணிகளை போலீசார் தொடங்கி இருக்கிறார்கள்.
பண்டிகைகள்: இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரையின் விலை திடீரென உயர்ந்துவிட்டதாம்.. பண்டிகை காலங்களில், நிறைய பலகாரங்கள் செய்யப்படுவது வழக்கம்.. எனவே, வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரையின் தேவை அதிகரித்துள்ளதால், இதன் விலைகளும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் சொல்கிறார்கள்.
சித்தோடு வெல்லம் சொசைட்டியில் வெல்லத்திற்கான ஏலம் நடத்தப்பட்டுள்ளது.. அப்போது, ஒரு மூட்டையானது ரூபாய் 1250 முதல் ரூ.1320 வரை விற்கப்பட்டிருக்கிறது..
கவலைகள்: அதேபோல் உருண்டை வெல்லம் 4200 மூட்டைகள் கொண்டுவரப்பட்டு, ஒரு மூட்டை ரூபாய் 1270 முதல் ரூ.1370 வரை விற்பனை செய்யப்பட்டதாம்.. அச்சு வெல்லம், ஒரு மூட்டை ரூபாய் 1270 முதல் ரூ.1370 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.. இப்படி 2 மூட்டைகளுக்குமே 30 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகளே கலங்கி போய் உள்ளார்களாம்.












Click it and Unblock the Notifications