58 பெண்களின் அந்தரங்கம் ஒரே பென்டிரைவில்.. பிரபல விஐபி பண்ணை வீட்டு ரகசியம் அம்பலம்! தொழிலதிபர் யார்
சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தையே உலுக்கியுள்ள ஒரு வினோத வழக்கில், ஆன்மீக முகமூடி அணிந்த ஒருவரின் கோர முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. சாதாரண ஜோதிடராக அறியப்பட்ட ஒருவர், அதிகார மையங்களையும் கோடீஸ்வரர்களையும் தன் கைக்குள் வைத்திருந்தது எப்படி என்ற சீக்ரெட் இப்போது வெளிவந்துள்ளது.. இதைக்கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. என்ன நடந்தது?
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்தவர் அசோக் காரத்.. இவர் மிகவும் பிரபலமான ஜோதிடராக வலம் வருபவர்.. 67 வயதாகிறது.. மிகவும் பிரபலமான இவரை பலரும் மரியாதையுடன் "கேப்டன்" என்றே அழைத்து வருகிறார்கள்.

விஐபி பண்ணை வீடு
இதற்கு முக்கிய காரணம், அவர் முன்னாள் மெர்சன்ட் நேவி அதிகாரியாகப பணியாற்றியதுதான்.. ராணுவ ஒழுக்கமும், ஜோதிடக் கலையும் அவரிடம் இருப்பதாக அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்கள் பலரும் நம்புகிறார்கள்.. அதனால்தான் அவரிடம் ஆசி பெறக வரிசையில் நிற்பார்களாம்..
ஆனால், அசோக்கின் இந்த பக்திக்கும் மரியாதைக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய பாலியல் வேட்டை நடந்திருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது..
பென் டிரைவில் ஆபாசம்
அசோக்கால் ஒரு பெண் ஏமாற்றப்பட்டுள்ளார்.. பாதிக்கப்பட்ட அந்த 35 வயது பெண், துணிச்சலாக நாசிக் போலீசில் புகாரும தந்துள்ளார்.. இந்த புகாரின் பேரில் கேப்டன் அசோக் கைது செய்யப்பட்டுள்ளார்..
அந்த பெண் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரையே அதிர வைத்துள்ளது.. பரிகார பூஜைகள் செய்வதாக கூறி அந்த பெண்ணை தனியாக வரவழைத்தாராம் அசோக்.. அவருக்கு பிரசாதம் என்ற பெயரில் மயக்க மருந்து கலந்த உணவையும் தந்துள்ளார்.
அந்த பெண் சுயநினைவை இழந்த பிறகு, பாலியல் வன்புணர்வு செய்து, அந்த ஆபாச காட்சிகளை ரகசியமாக வீடியோவும் பிடித்து வைத்து கொண்டாராம்.. பிறகு "உன் கணவருக்கு ஆபத்து நேரிடும்" அல்லது "இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன்" என மிரட்டியே 2022 முதல் 2025 வரை அந்தப் பெண்ணை டார்ச்சர் செய்துள்ளார்.
பண்ணை வீட்டில் பகீர்
அரசியல்வாதிகளிடம் செல்வாக்கு மிக்கவர் என்று தெரிந்தும்கூட, அந்த பெண் போலீசுக்கு சென்று புகார் தந்துள்ளார்.. இதற்கு பிறகே போலீசார் அலர்ட் ஆகி, அசோக்கை கைது செய்துள்ளனர்..
பிறகு அசோக்கின் பண்ணை வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடி சோதனையும் நடத்தியிருக்கிறார்கள்.. அங்கு அவர்கள் கண்டெடுத்த ஆதாரங்கள், ஒட்டுமொத்த காவல்துறையையும் அதிர வைத்துள்ளது.. அங்குள்ள ரகசிய கேமராக்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவ்களில், சுமார் 58 பெண்களுடன் தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
யாரந்த அரசியல்வாதி
ஒரு மிகப்பெரிய தொடர் குற்றச் சம்பவம் நடந்திருப்பதை உணர்ந்த அரசு, உடனடியாக ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்துள்ளது.. அசோக்கின் பண்ணை வீட்டில் இருந்து சட்டவிரோதத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.. முக்கிய அரசியல் புள்ளிகளுடன் அவருக்கு இருந்த நெருக்கம் காரணமாக, இந்த வழக்கு மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது..
பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த இந்த "கேப்டன்" தற்போது மார்ச் 24-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.. டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களையும் கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்களாம்..!!!












Click it and Unblock the Notifications