விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம்
சென்னை: தமிழகத்தின் நீர்நிலைகளில் வளரும் மீன்களிலேயே அசைவப் பிரியர்களின் முதல் தேர்வாகவும், அதிக மவுசு கொண்டதாகவும் விளங்குவது விரால் மீன்... நன்னீர் மீன் வகைகளில் தனித்துவமான சுவை மற்றும் அபரிமிதமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளதால், சந்தையில் இதற்கு எப்போதும் கிராக்கி குறையவே இல்லை. இந்த மீனின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா?
மற்ற மீன்களை போலன்றி, இதன் உடல் உருண்டையாகவும் நீளமாகவும் அமைந்திருக்கும் விரால் மீன்கள். மிக முக்கியமாக, இதன் தலைப் பகுதி ஒரு பாம்பின் தலையைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பது இதன் அடையாளமாகும்.

வித்தியாசமான தோற்றம்
விரால் மீன் குழம்புக்கும் வறுவலுக்கும் எந்த அளவுக்கு ஈடு இணையற்ற ருசியைத் தருகிறதோ, அதைவிடப் பல மடங்கு ஆரோக்கிய நன்மைகளை கொண்டது இந்த விரால் மீன்.
குறிப்பாக, இன்றைய காலத்தின் பெரும் சவாலாக இருக்கும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் இந்த மீன் முக்கியப் பங்கு வகிக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சீராக பராமரிக்க விரால் மீன் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விரால் மீன் ஊட்டச்சத்துக்கள்
ஊட்டச்சத்து ரீதியாக பார்த்தால், 100 கிராம் விரால் மீனில் சுமார் 18 கிராம் புரதமும், மிகக் குறைந்த அளவிலான கொழுப்பும் நிறைந்துள்ளன... இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்குப் பெரும் அரணாக விளங்குகின்றன.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு விரால் மீன் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். வழக்கமாக தாய்ப்பால் சுரப்புக்காக சுறா மீன் பரிந்துரைக்கப்படுவது போல, விரால் மீனை உட்கொள்வது தாய்மார்களுக்கு சத்துக்களைத் தருவதோடு, தாய்ப்பால் வழியாகக் குழந்தைகளுக்கு அத்தியாவசியமான ஒமேகா-3 சத்துக்கள் சென்றடைய உதவுகிறது.
சுவாசிக்கும் தன்மை
இது கருவிலுள்ள குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தூண்டி, கண்பார்வைத் திறனை மேம்படுத்துவதோடு, குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியையும் உறுதிப்படுத்துகிறது... மேலும், வயது முதிர்ந்த பெண்களுக்கு ஏற்படும் இதய நோய் அபாயத்தை குறைக்கவும், நரம்பு தளர்ச்சி மற்றும் மன அழுத்தம் போன்ற பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் விரால் மீன் உணவுகள் சிறந்த மருந்தாக அமைகின்றன.
விரால் மீனில் இன்னொரு ஆச்சரியமான அம்சம் அதன் உயிர்வாழும் திறன். இது வெளிக்காற்றையும் சுவாசிக்கும் தன்மை கொண்டதால், பிடித்துச் சந்தைக்குக் கொண்டு வந்த பிறகும் நீண்ட நேரம் உயிருடன் துள்ளிக் கொண்டிருக்கும்.. இதனால் நுகர்வோருக்கு எப்போதும் புதிய மீன்கள் தடையின்றி கிடைக்கின்றன. கண்பார்வை குறைபாடு, தோல் நோய்கள் மற்றும் காது கேளாமை போன்ற பாதிப்புகளைக் குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
எப்படி கிளீன் செய்வது
இருந்தாலும், இவ்வளவு நன்மைகள் கொண்ட இந்த மீனைச் சமைப்பதில் ஒரு சவாலான விஷயம் அதன் சுத்தம் செய்யும் முறைதான். விரால் மீனின் உடம்பில் இயற்கையாகவே ஒரு வழுவழுப்பு தன்மை இருக்கும். இதனைச் சரியாக நீக்காமல் சமைத்தால் மீன் ஒருவித துர்நாற்றத்தை வெளிப்படுத்தும்.
அதனால் வெறும் கத்தியால் சுரண்டாமல், சிமெண்ட் தரையில் வைத்து நன்றாகத் தேய்த்துக் கழுவுவது தென் மாவட்டங்களில் இன்றும் பின்பற்றப்படும் ஒரு பாரம்பரிய முறையாகும். இப்படி நான்கைந்து ஐந்து முறை முறையாக கிளீன் செய்துவிட்டு செய்து சமைக்கும்போது, அதன் உண்மையான சுவையும் மணமும் அல்டிமேட்டாக இருக்கும்...!!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications