ஆஹா.. அக்கா தங்கச்சின்னா இப்படித்தாய்யா இருக்கணும்.. தமிழச்சியின் பாசப் பிடியில் ஜோதிமணி!
ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியனின் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது
சென்னை: இந்த அளவுக்கு ஜோதிமணியும், தமிழச்சி தங்கபாண்டியனும் கட்டிப்பிடித்து கொள்வார்கள் என்று தெரியாது.. அன்பு, பாசம், உரிமை என எல்லாமுமாய் அந்த போட்டோவில் தெரிகிறது.
சமீபத்தில் நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள் தமிழச்சி தங்கபாண்டியனும், ஜோதிமணியும். இவர்களுக்குள் இதற்கு முன்பு எந்த அளவுக்கு நெருக்கம் இருந்திருக்கும் என தெரியவில்லை.

ஆனால் இப்போது எம்பி ஆகி உள்ள இவர்கள் ஒன்றாகவே டெல்லிக்கு செல்ல உள்ளனர். இருவருமே எழுத்தாளர்கள். பொதுவாக, இலக்கியவாதிகளுக்கு சமூக அக்கறை நிறைந்தே இருக்கும். அரசியல்வாதிகள் கொஞ்சம் அடக்கியே வாசித்தாலும், அவர்களைவிட அதிகமாகவே பொங்குபவர்கள்தான் இலக்கியவாதிகள். அது ஜோதிமணிக்கும் தமிழச்சிக்கும் நிறையவே உண்டு.
நேற்று முன்தினம்கூட, "தமிழகத்தில் ஹிந்தி மொழியை திணிக்கப் பார்த்தால் தமிழகம் போர்குணத்துடன் எதிர்க்கும்" என்று இவர்கள் இருவரும் ட்வீட் போட்டு மிரள வைத்தனர். இதில் எம்பியாகவும் உருவாகி விட்டதால், பார்லிமெண்ட் எப்படி கொதிக்க போகிறதோ தெரியவில்லை. தமிழகத்துக்கு எதிராக எது நடந்தாலும் இவர்கள் இருவரும் அங்கே சும்மா இருக்க மாட்டார்கள் என்று மட்டும் தெரிகிறது.
கலைஞர் கண்ட சுயமரியாதை தமிழச்சிகள்.. @ThamizhachiTh @jothims pic.twitter.com/kAt0CmtyDu
— G.ARUN kUMAR (@GARUNkU88340113) June 4, 2019
இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்து கொண்டுள்ளார்கள். இது எப்போது எடுத்தது என தெரியவில்லை. வெற்றி பெற்ற பூரிப்போ என்னவோ, முகமெல்லாம் மலர்ச்சி... சிரிப்பு.. சந்தோஷமாய் இருக்கிறார்கள். அடுத்த செகண்ட் இருவரும் கட்டிப்பிடித்து கொள்கின்றனர். இந்த போட்டோ வைரலாகியும் வருகிறது. எப்படியோ... ஏதோ ஒரு வகையில்.. இந்த இரு பெண் போராளிகளும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை தங்கள் மீது திசை திருப்பி விட்டுள்ளனர்!
அன்று அண்ணன் தங்கையாக கரூர் மற்றும் அரவக்குறிச்சி களத்தைக் கலக்கினர் ஜோதிமணியும், செந்தில் பாலாஜியும். இன்று அக்காள் தங்கையாக நாடாளுமன்றத்தை ஒரு கை பார்க்க கிளம்பி விட்டனர் ஜோதிமணியும், தமிழச்சியும்.. கலக்குங்க!












Click it and Unblock the Notifications