சாதியை தூக்கி போடுங்கடா.. செத்தா சாதியா கூட வர போகுது.. பொட்டில் அடித்த மாதிரி ஒரு வீடியோ!
சென்னை: "ஏன்டா சாதி பெயரை சொல்லி இப்படி அடிச்சிக்கிறீங்க? இதெல்லாம் தேவையா உனக்கு? சாதியெல்லாம் தூக்கி போடுங்கய்யா.. எந்த காலத்துல இருக்கீங்க எல்லாரும்... இன்னமும் சாதியை ஏன் புடிச்சிட்டு தொங்கிட்டு இருக்கீங்க.. உழைச்சாதான் நமக்கு சோறு" என்று யதார்த்தத்தை இயல்பாக வெளிப்படுத்தி இளைஞர் ஒருவர் பேசும் வீடியோ படுவைரலாகி வருகிறது.
Recommended Video
திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அது ஒரு டிக்டாக் வீடியோ பதிவு.. "உழைத்தால்தான் சாப்பாடு.. ஏன் சாதி பெயரில் அடிச்சுக்கிறீங்க" என்று தலைப்பில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இது ஒரு டிக்டாக் வீடியோ போல தெரிகிறது... அந்த வீடியோவில் 4 இளைஞர்கள் உள்ளனர்.. ஒருவர் மட்டுமே வெற்று உடம்பில் களைத்து போய் பேசுகிறார். அப்போது அவர் பேசும்போது சொன்னதாவது:

4 பேர் இருக்கோம்
"பாருங்க.. உழைச்சு காசு சம்பாதிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு பாருங்க.. இங்க 4 பேர் இருக்கோம்.. இந்த 4 பேரும் 3 சாதிக்காரங்க.. ஆனா என்னைக்குமே நாங்க அடிச்சிக்கிட்டதும் இல்லை, சாதி பெயரை சொல்லிக்கிட்டதும் இல்லை.. நீங்க ஏன்டா சாதி பெயரை சொல்லி அடிச்சிக்கிறீங்க? உழைச்சாதான்டா சோறு.. நீ செத்து போயிட்டேன்னு வெச்சுக்கியேன், உனக்கு குழி தோண்டறவன் ஒரு சாதிக்காரனா இருப்பான், உன்னை தூக்கிறவன் 4 பேரும் ஒரு சாதிக்காரனா இருப்பான்? மேளம் அடிக்கிறவன் ஒரு சாதிக்காரனா இருப்பான்.. இதெல்லாம் தேவையா உனக்கு?

சோறு
சாதியெல்லாம் தூக்கி போடுங்கய்யா.. எந்த காலத்துல இருக்கீங்க எல்லாரும்... இன்னமும் சாதியை ஏன் புடிச்சிட்டு தொங்கிட்டு இருக்கீங்க.. நீ உழைச்சா உனக்கு சோறு.. நான் உழைச்சாதான் எனக்கு சோறு.. இதோபாரு.. ஒரே பாலைவனமா இருக்கு.. இங்கதான் வெயில்ல உழைச்சி வேலை பார்க்கிறோம்.. நாங்க எல்லாருமே டிகிரி முடிச்சிருக்கோம்.
|
பட்டதாரிகள்
எல்லாருமே படிச்சிருக்கோம்.. ஏன்னா வேலை கிடைக்கல.. ஏன்னா நாம எல்லாரும் ஏழைங்க.. சாதியை மட்டும் தூக்கி போடுங்கடா?" என்கிறார். இந்த இளைஞர்கள் யார் என்று தெரியவில்லை.. ஆனால் பேசுபவர் கடுமையான விரக்தியும், சோர்வும் அவரது பேச்சில் தெரிகிறது.. சாதியை தூக்கி எறிங்கடா என்று உரிமையாக இவர் சொல்லும் வரிகள் ஏராளமானோரை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

மானமும் - அறிவும்
"மானமும் அறிவும் மனிதருக்கு அழகு" என்று இந்த வீடியோவிற்கு ஒரு கேப்ஷன் தந்து பதிவிட்டுள்ளார் எம்பி செந்தில்குமார். "வாழ்க்கையை உணர்த்திய அனுபவத்தின் வெளிப்பாடு"... என்றும், "புத்தகத்தை படிச்சி பட்டம் வாங்குனவங்களுக்குகூட தெரியமாட்டேங்குதே சார்" ... என்றும் இந்த இளைஞருக்கு ஆதரவான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications