Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிட்டிஷ் உருவாக்குன கிரிக்கெட் மட்டும் ஆடுவீங்களா? பாரத் பெயரை கொண்டாடிய சேவாக்! விளாசிய நெட்டிசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கொண்டாடி உள்ளார். இதை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

Virendra Sehwag was trolled for supporting the name-changing of India to Bharat

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் இவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, சரத் பவார், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் முமபையில் கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தியா கூட்டணிக்கு நாளுக்கு நாள் மக்களுக்கான ஆதரவு கிடைக்க தொடங்கி உள்ளது. இந்தியா கூட்டணி மக்கள் இடையே கவனம் பெற தொடங்கி உள்ளது. மோடி vs இந்தியா என்ற வாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் இந்தியா கூட்டணிக்கு செக் வைக்கும் விதமாக 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய அரசு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த நிலையிலதான் இந்தியா கூட்டணி கவனம் பெற்றுள்ளதால், இந்தியாவின் பெயர் பாரத குடியரசு என்று மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய பாஜக அரசு இதற்கான திட்டங்களில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பாரத குடியரசுத்தலைவர் என குடியரசுத்தலைவர் மாளிகை அழைப்பிதழ் அளித்துள்ளதும் இந்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜி.20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு அழைப்பிதழில் பாரத குடியரசுத்தலைவர் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்ட தொடர் நடக்க உள்ளது. இந்த நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடரில் பாரத குடியரசு என மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கொண்டாடி உள்ளார். இதை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்

அதில், நாம் பாரதியர்கள் என்று அழைக்கப்பட வேண்டும். பெயர் என்பது நமக்கு பெருமையை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர் & எங்கள் உண்மையான பெயரை 'பாரத்'. அதை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட கால தாமதமாகிவிட்டது. அதை மீண்டும் வைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் அதை கிண்டல் செய்து வருகின்றனர். நடிகர் விஷ்ணு விஷால் எழுப்பிய கேள்வியில், இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை ஏற்படுத்தவில்லையா என்று கேட்டுள்ளார். இன்னொருவர் கொடுத்த வரலாற்று விளக்கத்தில், வரலாற்று ரீதியாகவே 'இந்தியா' என்ற பெயர் முதலில் சிந்து (சிந்து) நதியிலிருந்து பெறப்பட்டது. கிமு 5 ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவிற்கும் ஆங்கிலேயர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்றுள்ளார்.

அதே ஆங்கிலேயர்கள் கொடுத்த விளையாட்டுதான் கிரிக்கெட். அதற்கு பதிலாக நம் கபடியை ஆடியிருந்தால் நமக்கு பெருமை சேர்ந்து இருக்குமே என்று கேட்டு கிண்டல் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+