மனைவியை "தூக்கிய" போலீஸ்காரர்.. தலைதலையா அடிச்சிக்கிட்ட கணவர்.. விருதுநகரில் யாருப்பா அந்த எஸ்.ஐ.?
சென்னை: மனைவியை போலீஸ்காரர் ஒருவர் அபேஸ் செய்துவிட்டதாக, கூலித்தொழிலாளி ஒருவர் பரபரப்பு புகார் தந்திருக்கிறார்.. என்ன நடந்தது?
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அந்த கூலித்தொழிலாளி.. 38 வயதாகிறது.. இவரது மனைவிக்கு 35 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

இந்த கூலித்தொழிலாளி, 4 வருடங்களுக்கு முன்பு, மனைவியையும், மகனையும் விட்டுவிட்டு, குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார்... இந்நிலையில், மனைவிக்கும், எஸ்ஐ ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது...
கூலித்தொழிலாளி: இதனிடையே குவைத்திலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார் கூலித்தொழிலாளி.. ஆனால் அவரை மறுபடியும் வெளிநாட்டு வேலைக்கே செல்லுமாறு மனைவி கட்டாயப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக தகராறும் செய்திருக்கிறார் மனைவி.
இதனால், சந்தேகப்பட்ட கணவர், வெளிநாடு செல்லாமல் திருப்பூரிலேயே தங்கி வேலை பார்த்து வந்தார்... ஆனால், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அதிகமானது.. எனவே, இதுகுறித்து தீவிரமாக கண்காணித்தார்.. அப்போதுதான், ராஜபாளையத்தில் பணிபுரியும் எஸ்ஐ ஒருவருடன் 3 வருடங்களாக மனைவி, தொடர்பில் இருப்பது தெரியவந்தது..
விவாகரத்து: இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், எஸ்ஐயுடனான தொடர்பை துண்டிக்குமாறு மனைவியிடம் கண்டித்துள்ளார்... ஆனால் மனைவி அதற்கு மறுத்துவிட்டாராம்.. அத்துடன் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார்..
இதற்கு நடுவில், போலீஸ் எஸ்ஐ, நேரடியாகவே இந்த விவகாரத்தில் தலையிட்டதுதான் விஷயத்தை கன்பார்ம் செய்திருக்கிறது. கணவரின் வீட்டிற்கு சென்ற எஸ்ஐ, "உன் மனைவிக்கு டைவர்ஸ் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்... இல்லாவிட்டால் உன் மீது கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவேன்" என்று மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரிகிறது... இதைக்கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த கணவர் போலீசில் புகார் தந்துள்ளாராம்.
குழந்தைகள்: தன்னுடைய மனைவியை எஸ்.ஐ.யிடமிருந்து மீட்டுத்தர வேண்டும் என்று ஆன்லைன் மூலம் ராஜபாளையம் மகளிர் போலீசுக்கு புகார் தெரிவித்துள்ளார்.. இதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.. சம்பந்தப்பட்ட எஸ்ஐக்கு ஏற்கனவே கல்யாணமாகி 2 குழந்தைகளும் இருக்கிறார்களாம்!!!












Click it and Unblock the Notifications