Vistadome train: மதுரை டூ குருவாயூர் ரயிலில் கண்ணாடி மேற்கூரை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. ரயிலில் போறதே டூர்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் இருந்து குருவாயூருக்கு சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இனி கண்ணாடி மேற்கூரை கொண்ட விஸ்டோடம் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை அழகை ரசித்தபடியே பயணிகள் பயணிக்கலாம். இந்த ரயிலில் சைடு பக்கங்கள் கண்ணாடியுடன் இருப்பதோடு, மேற்கூரையிலும் கண்ணாடிகளாகவே இருக்கும்.

இதனால் பயணிகள் ரயில் பயணத்தோடு சுற்றுலா சென்றது போன்ற அனுபவத்தை பெற முடியும். இந்த ரயில் வரும் 22ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு புதுப்புது நடவடிக்கைகளை ரயில்வே செய்து வருகிறது. பயணிகளுக்கு சவுகரியமாகவும், பாதுகாப்பான பயணம் அமையவும் ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.

Vistadome train with a glass roof from Madurai to Guruvayur Southern Railway announces

விஸ்டோடம் ரயில்

அந்த வகையில் பயணிகளை கவரும் வகையில், பயணிகள் இயற்கை அழகை பார்த்து ரசித்தப்படி செல்வதற்காகவும் விஸ்டோடம் என்ற ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது. அதாவது இந்த ரயில் பெட்டியின் சிறப்பம்சமே மேற்கூரையும் கண்ணாடியில் இருக்கும். மலைவாசஸ்தலங்களில் ரயில் செல்லும் போது பயணிகள் ஜன்னல் கண்ணாடி வழியாகவும், மேற்கூரை கண்ணாடி வழியாகவும் இயற்கை அழகை ஒருசேர ரசிக்க முடியும்.

இந்த ரயிலானது முதன் முதலாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் - கிரந்துல் இடையே இயக்கப்பட்டு வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 995 மீட்டர் உயரத்தில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 58 குகைகள், 84 பாலங்கள், ஹைதிகி நீர்வீழ்ச்சி, கிரீன்வேலி மற்றும் ஆந்திர மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத தலங்கள் வழியாக இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

22 ஆம் தேதி முதல் மதுரை டூ குருவாயூர்

தற்போது இதே சிறப்பம்சம் கொண்ட விஸ்டோடம் ரயிலானது மதுரை டூ குருவாயூருக்கு இயக்கப்பட உள்ளது. வரும் 22 ஆம் தேதி முதல் இந்த ரயில் (வண்டி எண்: 16327 / 16328) இருமார்க்கத்தில் இருந்தும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் 22 ஆம் தேதியில் இருந்து விஸ்டோடம் ரயிலானது மதுரையில் இருந்து தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக குருவாயூருக்கு இயக்கப்படும்.

சாதாரண எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பதிலாக இந்த விஸ்டோடம் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் செல்லும் போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மலை, தென்காசி பொதிகை மலை, ஆரியங்காவு பாலம், தென்மலை, புனலூர், கொட்டாரக்கரை என ரயிலில் பயணித்தப்படியே மேற்கூரை கண்ணாடி வழியாகவும் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம்.

கட்டணம் எவ்வளவு இருக்கும்?

தெற்கு ரயில்வே அதிகாரிகள் இது தொடர்பாக கூறுகையில், மதுரை - குருவாயூர் விஸ்டோடம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் - 16327) வரும் 22 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி வரை இயக்கப்படும். இதே போன்று மறுமார்க்கத்தில் குருவாயூர் - மதுரை விஸ்டோடம் எக்ஸ்பிரஸ் (16328) வரும் 23 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி வரை இயக்கப்படும்.

கட்டணத்தை பொறுத்தவரை சதாப்தி ரயிலின் எக்சிக்யூட்டிவ் வகுப்பு கட்டணத்தை விட ஒரு மடங்கு அதிகமாக இருக்கும். சதாப்தி ரயிலில் 100 கி.மீ. தூரத்துக்கு ரூ.490 அடிப்படை கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பதிவானது ரயில் ஒன் செயலியில் மட்டுமே செய்ய முடியும்" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+