சித்ரா இங்கே இருக்காதே.. வா போகலாம்... "ஆவி"யிடம் கெஞ்சிய அம்மா.. மனதை உலுக்கிய சம்பவம்!
சித்ராவின் தாயார் அவரது ஆவியிடம் கெஞ்சிப் பேசினார்.
சென்னை: நடிகை சித்ரா தூக்கு போட்டு கொண்ட ஹோட்டல் ரூமிற்குள் அவரது அம்மா இன்று சென்றிருந்தபோதுதான் அந்த உலுக்கும் சம்பவம் நடந்தது.
நடிகை சித்ரா கடந்த வருடம் டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்... இந்த மரணம் தமிழகத்தையே உலுக்கி போட்டது..
இதையடுத்து, தற்போது வரை சித்ராவின் தற்கொலை வழக்கு சம்பவம் ஒரு பக்கம் நடந்து வருகிறது.. மற்றொரு பக்கம் சித்ராவின் ரசிகர்கள் அந்த சோகத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல், சித்ரா எப்படி இறந்தார் என்பது உறுதியாக தெரியாமலும் தவித்து வருகின்றனர்,.

ஹோட்டல்
இந்நிலையில, சித்ரா தங்கியிருந்த ஹோட்டல் ரூமிற்கு அவரது குடும்பத்தினர் இன்று வந்திருந்தனர்.. சித்ராவின் அம்மா, அப்பா, உறவுக்கார பெண் ஆகியோர் வந்தனர்.. அந்த ரூமில் உள்ள சித்ராவின் டிரஸ் மற்றும் உடமைகளை எடுத்து செல்ல சித்ரா, ஹேமந்த் குடும்பத்தாருக்கு போலீசார் அனுமதி தந்துள்ளனர்..

ஹோட்டல் ரூம்
எனவே, அதனால் இன்று முதலில் சித்ராவின் குடும்பம் மட்டும் ஹோட்டலுக்கு வந்திருந்தது.. போலீசார் துணையுடன் வந்த அவர்கள், சித்ராவின் உடமைகளை பேக் செய்ய ஆரம்பித்தனர்.. ஹோட்டல் ரூமிற்குள் நுழைந்ததுமே சித்ராவின் அம்மா அழ ஆரம்பித்துவிட்டார்.. "சித்ரா நீ எங்கம்மா இருக்க?" என்று புலம்பி கொண்டே அனைத்தையும் பேக் செய்தார்.

மதுபாட்டில்
அப்போது, அந்த ரூமில் மது பாட்டில் ஒன்று கிடந்தது.. அதை சித்ராவின் அப்பா எடுத்து, "இது யாருடையது? இந்த பாட்டில் விலை எப்படியும் 2 ஆயிரம் ருபாய் இருக்கும்.. இதெல்லாம் யார் பணம்? யார் பணத்தில் ஹேமந்த் வாங்கி குடித்தான்? என்று டென்ஷனாக பேசினார்.

சித்ரா.. சித்ரா
சித்ரா சம்பந்தப்பட்ட அனைத்தையும் எடுத்து கொண்டு கடைசியாக ரூமை விட்டு வெளியே வந்தனர்.. அப்போது திடீரென சித்ராவின் அம்மா மறுபடியும் ரூமுக்குள் சென்றார்.. "சித்ரா சித்ரா" என்று கதறி அழ ஆரம்பித்தார்.. பின்னர் ரூமுக்கு வெளியே ஒரு கற்பூரத்தை ஏற்றினார்..

சித்ரா ஆவி
உடனே சித்ராவின் ஆவியிடம், "சித்ரா, இனிமேல் இங்கே இருக்காதே.. வா, நம்ம வீட்டுக்கு போகலாம்" என்று கெஞ்சி கொண்டே அழுதார்.. இதையெல்லாம் பார்த்து சித்ராவின் அப்பா உட்பட அங்கிருந்தோருக்கு இதயமே உலுக்கி போட்டதுபோல ஆகிவிட்டது. பின்னர் ஒருவழியாக அவரை தேற்றி அழைத்து சென்றனர். சித்ரா குடும்பம் போலவே, ஹேமந்த்தின் குடும்பத்தினரும் வந்து, ஹேமந்த் சம்பந்தப்பட்ட பொருட்கள், டிரஸ்களை எடுத்து சென்றார்களாம்.












Click it and Unblock the Notifications