இவங்களுமா?.. "அந்த" பக்கம் போறாங்களாமே.. எகிறும் மவுசு.. பி.ஏ.விடம் சசிகலா போட்ட ஆர்டர்..!
சசிகலா - ரஜினி சந்திப்பினால் சசிகலா உற்சாகமாக இருக்கிறாராம்
சென்னை: சசிகலாவின் சமீப கால அரசியல் வேகம் எடுத்துள்ள நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், சசிகலா பக்கம் தாவ ரெடியாகி உள்ளார்களாம்.. இது அக்கட்சிக்குள் புயலை வீச தொடங்கி உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றும், அதிமுக மேலிடத்துக்கு கவலைகள் தீரவில்லை.. அதிமுகவில் அதிருப்திகள் கூடி வரும் நிலையில், சசிகலாவுக்கு புது தெம்பும் கூடி வருகிறது..
ரஜினிகாந்த் - சசிகலா சந்திப்பு நடந்தது இல்லையா.. போயஸ்கார்டன் சென்று ரஜினியை சந்தித்து விட்டு திரும்பும் போது, ஜெயலலிதாவும் தானும் வாழ்ந்த வேதா இல்லத்தை, காரில் இருந்தபடி ஏக்கத்துடன் பார்த்தவாறே திரும்பி வந்தாராம் சசிகலா... அப்போது அவரது கண்ணில் நீர்த்துளி லேசாக எட்டிப்பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

சந்திப்பு
அதேசமயம், ரஜினியுடனான சந்திப்புக்கு பிறகு சசிகலாவிடம் உற்சாகம் மிகுந்துள்ளதாம்.. குறிப்பாக, தேர்தல் மூலம் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் அறிவித்துக் கொண்டதிலும், அதிமுகவில் இனி நாம் நுழையவே முடியாது என்கிற அளவுக்கு எடப்பாடி முடிச்சுகளை போட்டு வைத்திருப்பதிலும் அப்செட்டாகவே இருந்துள்ளார் சசிகலா... ஏற்கனவே பல வியூகங்களை வகுத்தும், அது எடுபடாமல் போன நிலையில், இந்த அதிமுக மேலிட தேர்தல் மேலும் சசிகலாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.

உற்சாகம்
ஆனால், ரஜினி தம்பதியினரை சந்தித்தது செம தெம்பை தந்துவிட்டதாம்.. "அந்த சந்திப்பில் நடந்த பல விஷயங்கள்தான், புரட்சித் தாய் சின்னம்மாவை உற்சாகமாகவே வைத்திருக்கிறது" என்கிறார்கள் சசிகலா குடும்பத்துக்கு ஆதரவானவர்கள்... அதுமட்டுமல்ல, ரஜினியுடனான சந்திப்புக்கு பிறகு, அதிமுகவினர் சசிகலாவிடமும், அவரது உதவியாளரிடமும் பேசுவதும் அதிகரித்திருப்பதாக தெரிகிறது...

வர வேண்டாம்
குறிப்பாக, அதிமுகவில் எடப்பாடி தரப்பால் ஓரங்கட்டப்பட்டவர்கள் , புறக்கணிக்கப்பட்டவர்கள் பலரும் சசிகலாவை சந்திக்க நேரில் வருவதாக கூறியுள்ளனர். அதற்கு சசிகலா, "இப்போது வர வேண்டாம்.. சொல்லும்போது வரட்டும்" என்று உதவியாளர் மூலம் அவர்களுக்கு பதில் தந்து வருகிறாராம்.. அதேபோல, இத்தனை மாத காலமாக சசிகலாவிடம், மறைமுகமாக தொடர்பில் இருந்தவர்களுக்கு இந்த ரஜினியுடனான சந்திப்பு மேலும் நம்பிக்கையை தந்துள்ளதாம்..

முயற்சி
ஆக மொத்தம் அதிமுக பக்கமிருந்து, முக்கிய நிர்வாகிகள் சசிகலாவின் பக்கம் காத்து கிடக்கிறார்களாம்.. இதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.. ஏற்கனவே அதிருப்தியாளர்கள் சசிகலா பக்கம் தாவ உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர்களை சரிக்கட்டும் முயற்சியில் எடப்பாடி தரப்பு இறங்கி வருவதாக கூறப்பட்ட நிலையில், தன்பக்கம் உள்ள முக்கிய நிர்வாகிகளையும் சரிக்கட்டும் கூடுதல் வேலை எடப்பாடிக்கு வந்து சேர்ந்துள்ளதாம்..!
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications