சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இடிக்குதே".. சசிகலாவும், தினகரனுமா.. ஒரே ஆச்சரியம்.. கூடவே வந்த "எம்ஜிஆர்".. இது எப்படி நடந்தது?

சசிகலா, டிடிவி தினகரன் மே தின வாழ்த்து சொல்லி உள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: சொல்லி வைத்ததுபோலவே, டிடிவி தினகரனும், சசிகலாவும் ஒரே மாதிரியான வாழ்த்துக்களை உதிர்த்துள்ளது ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு, அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கு, அந்நிய செலாவணி வழக்கு, கொடநாடு வழக்கு, என சசிகலா எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சனைகள் முட்டிக் கொண்டு நிற்கின்றன.

மற்றொரு பக்கம், தன்னை வரவேற்கும் அல்லது ஆதரிக்கும் நிர்வாகிகளை தினகரன் கட்சியில் இருந்து நீக்கி கொண்டிருப்பதும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது..

ஹிஜாபை அடுத்து ஹலால் இறைச்சிக்கு குறி... பெங்களூரு மாநகராட்சிக்கு கர்நாடக அரசு பரபர உத்தரவுஹிஜாபை அடுத்து ஹலால் இறைச்சிக்கு குறி... பெங்களூரு மாநகராட்சிக்கு கர்நாடக அரசு பரபர உத்தரவு

அமமுக - சசிகலா

அமமுக - சசிகலா

நாளுக்கு நாள் தினகரன் - சசிகலா இடையேயான விரிசல் அதிகமாகி கொண்டே போகிறது.. சிறைக்கு சென்றபோது, கட்சியையும், ஆட்சியையும் தினகரனிடம் ஒப்படைத்து சென்ற நிலையில், திரும்பி வந்து பார்த்தால், அமமுக கட்சிப் பதவி கூட அவருக்கு இல்லாத வகையில், அனைத்தையும் காலி செய்து வைத்திருந்தார் தினகரன்.. பல முக்கிய தலைகளும் திமுகவுக்கு பறந்துவிட்ட நிலையில், வலுவிழந்து கிடக்கும் அமமுகவை கண்டு கொந்தளித்துள்ளார்.நாளுக்கு நாள் தினகரன் - சசிகலா இடையேயான விரிசல் அதிகமாகி கொண்டே போகிறது.. சிறைக்கு சென்றபோது, கட்சியையும், ஆட்சியையும் தினகரனிடம் ஒப்படைத்து சென்ற நிலையில், திரும்பி வந்து பார்த்தால், அமமுக கட்சிப் பதவி கூட அவருக்கு இல்லாத வகையில், அனைத்தையும் காலி செய்து வைத்திருந்தார் தினகரன்.. பல முக்கிய தலைகளும் திமுகவுக்கு பறந்துவிட்ட நிலையில், வலுவிழந்து கிடக்கும் அமமுகவை கண்டு கொந்தளித்துள்ளார்.நாளுக்கு நாள் தினகரன் - சசிகலா இடையேயான விரிசல் அதிகமாகி கொண்டே போகிறது.. சிறைக்கு சென்றபோது, கட்சியையும், ஆட்சியையும் தினகரனிடம் ஒப்படைத்து சென்ற நிலையில், திரும்பி வந்து பார்த்தால், அமமுக கட்சிப் பதவி கூட அவருக்கு இல்லாத வகையில், அனைத்தையும் காலி செய்து வைத்திருந்தார் தினகரன்.. பல முக்கிய தலைகளும் திமுகவுக்கு பறந்துவிட்ட நிலையில், வலுவிழந்து கிடக்கும் அமமுகவை கண்டு கொந்தளித்துள்ளார்.

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

கட்சியை கலைக்க சொன்னாலும் தினகரன் கலைக்கவில்லை என்பதால், அமமுக என்ற கட்சியையே ஆதரிக்காமல், அதிமுகவை மட்டுமே குறி வைத்து சசிகலாவின் அரசியல் நகர்கிறது.. இவர்களின் விரிசல் எப்போது தீருமோ என்று தென்மண்டல நிர்வாகிகள் காத்து கிடக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், நாளை மே தினத்தை முன்னிட்டு, சசிகலாவும், தினகரனும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.. எதேச்சையாக வெளியிட்ட அறிக்கை என்றாலும், இருவரும் சொல்லி வைத்ததுபோலவே எம்ஜிஆர் பாட்டை அதில் குறிப்பிட்டுள்ளனர்.

 மனித நாகரீகம்

மனித நாகரீகம்

சசிகலா வாழ்த்து செய்தியில், இந்த உலகம் உழைப்பவர்களால் மட்டுமே இயங்கிக்கொண்டு இருக்கிறது. உடலினை இயந்திரமாக்கி, உதிரத்தை வியர்வையாக சிந்தி, மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய தொழிலாளர்கள், எட்டு மணி நேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய' உரிமையாக போராடிப் பெற்ற நாளே தொழிலாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

 ஒன்று எங்கள் ஜாதியே

ஒன்று எங்கள் ஜாதியே

உழைப்பாளர்களுக்குள் ஏற்ற, தாழ்வு இல்லை; அவர்களிடையே வேறுபாடு இல்லை; உழைப்போர் அனைவரும் சரிநிகர் சமமானவர்களே இதைத் தான் புரட்சித் தலைவர் அவர்கள், ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே! உழைக்கும் மக்கள் யாவரும், ஒருவர் பெற்ற மக்களே!"என்று உழைப்பின் மாண்பினையும், உழைப்பாளர்களின் பெருமையையும் பாடல்களின் மூலம் வெளிப்படுத்தினார். நம் அம்மா அவர்களும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்தார். எனதருமை தொழிலாளர் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

Recommended Video

    தேனியில் முதல்வர் ஸ்டாலின் | Oneindia Tamil
     எம்ஜிஆர்

    எம்ஜிஆர்

    அதுபோலவே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், "ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே! உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே!" என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பட பாடல் வரிகளை உண்மையாக்குவோம். மே தினத்தில் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் உழைப்பவர்களை பெருமிதத்தோடு கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார்.. இருவரும் ஒரே பாடலை, ஒரே நேரத்தில் பதிவிட்டுள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.. எடப்பாடி பழனிசாமி என்ன சொல்ல போகிறார் என்று தெரியவில்லை அதையும் பார்ப்போம்...!

    English summary
    VK Sasikala and ttv dinakaran May day greetings to tamilnadu peoples சசிகலா, டிடிவி தினகரன் மே தின வாழ்த்து சொல்லி உள்ளனர்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X