வலி நிவாரணி.. வாழ்வை தொலைத்தவர்களுக்கு மீட்டுக்கொடுக்கும் பிசியோதெரபிஸ்டுகள்.. சசிகலா வாழ்த்து
சென்னை: உடல் உபாதைகளால் தங்கள் வாழ்வையே தொலைத்து விட்ட நபர்களுக்கு அதனை மீட்டு கொடுக்கும் அற்புதத்தை நிகழ்த்திக்காட்டும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு எனது நெஞ்சார்ந்த உலக பிசியோதெரபி தின நல்வாழ்த்துக்கள் என்று சசிகலா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இயன்முறை மருத்துவம்' எனப்படும் பிசியோதெரபி மையங்கள் இன்றைக்கு அதிகரித்து விட்டன. எலும்பு மூட்டு, தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால், அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் சிகிச்சை. ஊசி, மருந்துகளைப் பயன்படுத்தாமல் உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ் (Therapeutic Massage), வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு வழிமுறை. உடலில் அடிபட்டால் காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், பாதிப்பிலிருந்து மீளவும் பிசியோதெரபி உதவும். கை, கால்களில் வலி, தசை பிடிப்பு, முதுகுவலி, தோள்பட்டை வலி போன்றவைகளுக்கு பிசியோதெரபி சிறந்த சிகிச்சை முறையாக உள்ளது.

வலுவிழந்த தசைகளையும் நரம்புகளையும் மீண்டும் வலுவடையவைப்பது, அவற்றின் செயல்திறனை அதிகரிக்கச் செய்வது ஆகியவைதான் பிசியோதெரபியின் முக்கிய வேலை. உலக பிசியோதெரபி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சசிகலா தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
சிறப்பான அர்ப்பணிப்பு உணர்வோடு தன்னலமற்று சேவையாற்றுகின்ற பிசியோதெரபிஸ்டுகள் தங்கள் நோயாளிகளுக்கும், சமூகத்திற்கும் அளிக்கும் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் உலக பிசியோதெரபி தினமாக கடைபிடிக்கப்படும் இந்நன்னாளில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் தங்கள் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் பராமரிக்க உதவும் வகையிலும், நாள்பட்ட வலி நிவாரணிகளை வழங்குவதிலும் பிசியோதெரபிஸ்டுகள் ஆற்றுகின்ற முக்கிய பங்கீனை அங்கீகரிக்கும் வகையில் உலக பிசியோதெரபி தினம் அனுசரிக்கப்படுவதை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
வளர்ந்துவரும் மருத்துவ துறையின் ஒரு அங்கமாக முன்னேறி கொண்டிருக்கும் இயன்முறை மருத்துவத்தின் மூலம் பல்வேறு உடல் உபாதைகளால் தங்கள் வாழ்வையே தொலைத்து விட்ட நபர்களுக்கு அதனை மீட்டு கொடுக்கும் அற்புதத்தை நிகழ்த்திக்காட்டும் பிசியோதெரபிஸ்டுகளுக்கு எனது நெஞ்சார்ந்த உலக பிசியோதெரபி தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications