"சந்தேகப்படாதீங்க".. சசிகலா சொன்ன வார்த்தை.. தெம்புடன் வடமாவட்ட 'தலைகள்'.. கலக்கத்தில் அதிமுக?
சசிகலாவின் அடுத்த அரசியல் நகர்வு துவங்கி உள்ளது
சென்னை: அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுக்குள் நுழைந்துள்ளார் சசிகலா.. இதனால் அதிமுக மேலிடம் விழிபிதுங்கி வருகிறதாம்..!
சசிகலாவின் அரசியல் வருகையை அதிமுக மேலிட தலைமைகளால் தடுத்து நிறுத்த முடியாத நிலைமைதான் ஏற்பட்டுள்ளது.. சசிகலாவை இழிவாக விமர்சித்து பேசி வருகிறார்கள்.. ஆவேசம் கலந்த தடித்த வார்த்தைகளில் பேட்டியும் தந்து வருகிறார்கள்.
ஆனால், இதுவரை சசிகலா அதற்கெல்லாம் எந்தவித பதிலையும் சொல்லவில்லை.. பொறுமையாக இருந்து வருகிறார்.. முக்கியமாக, அதிமுகவை கைப்பற்றுவதையை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார்...

எடப்பாடி பழனிசாமி
எப்போது தீவிர அரசியலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மெல்ல மெல்ல நிகழ்ச்சிகளில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளார்.. கோரிக்கைகள் அடங்கிய அறிக்கைகளைவிட துவங்கி உள்ளார்.. தேவர் ஜெயந்தி விழாவின்போது தென்மண்டல நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் யாருமே பசும்பொன் செல்லாத நிலையில், சசிகலா மட்டும் அன்றைய தினம் வந்திருந்தது அதிமுக தொண்டர்களுக்கு குஷியையும், தென்மாவட்ட நிர்வாகிகளுக்கு தெம்பையும் ஏற்படுத்தி இருந்தது...

செங்கல்பட்டு
இதற்கு பிறகு, வட மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் பணிகளை சசிகலா ஆரம்பித்துள்ளார்.. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக கைத்தறி பிரிவு தலைவர் பாலன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலர் சுப்ரமணி, மாவட்ட பிரதிநிதி பூபாலன். மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் பொன்னுசாமி மற்றும் பல்வேறு நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளனர்..

சந்தேகம்
சசிகலா வீட்டிலேயே இந்த சந்திப்பு நடந்துள்ளது.. அதிமுகவை ஒருங்கிணைக்க கோரிக்கை விடுத்ததாகவும் தெரிகிறது.. அதேபோல, "கட்சி நமக்கு கிடைக்குமா என்று சந்தேகப்படாதீங்க... கூடிய சீக்கிரம் அதிமுக முழுமையாக நம்மிடம் வரும். மறுபடியும் ஆட்சியைப் பிடிப்போம்" என்று நம்பிக்கை தந்து வருகிறாராம். யார் யார் தன்னை வந்து சந்தித்து பேசினார்கள் என்பதை அறிக்கை மூலமாகவும் சசிகலா வெளியிட்டிருந்தார்...

நேரடி பேச்சு
அதுமட்டுமல்ல அவர்களுடன் சேர்ந்து போட்டோவும் எடுத்துக் கொண்டார். அந்த போட்டோவையும் சசிகலா வெளியிட்டுள்ளார்... இதுதான் அதிமுக மேலிடத்துக்கு கலக்கத்தை தந்து வருகிறது.. ஏற்கனவே திமுகவை சமாளிக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி தரப்பு திணறி வரும் நிலையில், சசிகலாவின் நகர்வுகள் மேலும் கலங்கடிப்பதாகவே அமைந்து வருகிறது.. கடந்த மாதங்களில், போனில் மட்டுமே சசிகலா பேசி வந்த நிலையில், நேரடியாகவே அதிமுக நிர்வாகிகளிடம் பேச துவங்கி விட்டார்.

திமுக
இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, "இன்றைய சூழலில் பாஜக உட்பட அனைத்து கட்சிகளுமே பலவீனமாகி வருகின்றன.. கட்சிகளின் செல்வாக்கும் சரிந்து கொண்டு போகிறது.. தேர்தல்களும் அடுத்தடுத்து வர உள்ளது.. இதனால் திமுக பக்கம் சென்றால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று நினைத்து, மாற்று கட்சி நிர்வாகிகள் பலர் திமுகவில் தாவக்கூடும்.. எனவே, சசிகலா நினைத்தால், அதிமுகவை இழுத்து பிடித்து அரவணைத்து கொண்டு செல்ல ஓரளவு முடியும், ஆனால் அதற்கும் காலஅவகாசம் தேவைப்படும்.. எப்படி பார்த்தாலும் திமுகவின் அசுர வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆளாகி உள்ளன" என்றனர்.












Click it and Unblock the Notifications