விக்கிரவாண்டி தொகுதியில் திமுக புதிய சரித்திரம்.. வென்ற கட்சி, முதல் முறையாக மீண்டும் வென்றது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,065 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் முதல் முறையாக ஒரு தேர்தலில் வென்ற கட்சி அடுத்த தேர்தலில் மீண்டும் வென்ற புதிய சரித்திரத்தை திமுக எழுதி இருக்கிறது.

விழுப்புரம் லோக்சபா தொகுதியில் இடம் பெற்றிருப்பது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி. இத்தொகுதி 2011-ம் ஆண்டுதான் முதன் முதலாக உருவாக்கப்பட்டு தேர்தலை எதிர்கொண்டது.

Vikravandi by election 2024 tamilnadu 2024

2011 தேர்தல்: 2011-ம் ஆண்டு தேர்தலில் சிபிஎம் கட்சியின் வேட்பாளர் ராமமூர்த்தி வெற்றி பெற்றார். அத்தேர்தலில் ராமமூர்த்தி 78656 வாக்குகளையும் திமுகவின் ராதாமணி 63759 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

2016 தேர்தல்: விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவின் ராதாமணி மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுகவின் ராதாமணி 63757 வாக்குகளையும் அதிமுகவின் சேவல் ஆர்.வேலு 56845 வாக்குகளையும் பெற்றிருந்தார்.

2019 இடைத்தேர்தல்: ஆனால் 2019-ம் ஆண்டு சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்த திமுகவின் ராதாமணி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் 2019-ல் விக்கிரவாண்டி தொகுதி முதலாவது இடைத் தேர்தலை சந்தித்தது. இந்த இடைத் தேர்தலில் அதிமுகவின் முத்தமிழ்ச் செல்வம் 1,13,766 வாக்குகள் பெற்று வென்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் நா. புகழேந்தி 68,842 வாக்குகள் பெற்றார்.

2021 தேர்தல்: 2021-ம் ஆண்டு தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட திமுகவின் நா. புகழேந்தி 93,730 வாக்குகளையும் அதிமுகவின் முத்தமிழ்ச்செல்வம் 84,157 வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஆனால் திமுக எம்.எல்.ஏ. நா. புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார்.

2-வது இடைத் தேர்தல்: இதனால் விக்கிரவாண்டி தொகுதி 2-வது இடைத்தேர்தலை எதிர்கொண்டது. தற்போது நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா, பாமகவின் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் அபிநயா ஆகியோர் களம் கண்டனர். கடந்த 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

திமுக வெற்றி: விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் 5-வது தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். விக்கிரவாண்டி தொகுதியின் கடந்த 4 தேர்தல்களிலும் சிபிஎம், திமுக, அதிமுக, திமுக என கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்றன. இந்த தேர்தலில் மீண்டும் திமுக வேட்பாளரே வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைத்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியானது வன்னியர்களை பெரும்பான்மையாகக் கொண்டது. அடுத்ததாக தலித் வாக்காளர்களையும் பரவலாக இடைநிலை ஜாதியினரையும் கொண்ட தொகுதி விக்கிரவாண்டி. பொதுவாக வன்னியர்கள் அதிகம் இருக்கும் தொகுதியில் பாமக கை ஓங்கும் என்ற கருத்தை எப்போதுமே திமுக தகர்த்துக் கொண்டுதான் வருகிறது. 2021 சட்டசபை தேர்தலிலும் வன்னியர்கள் அதிகமாக உள்ள வட தமிழ்நாட்டில் திமுக அதிக இடங்களில் கைப்பற்றியது.

சிந்தாமல் சிதறாமல் திமுகவுக்கு போன அதிமுக வாக்குகள்: தற்போதைய இடைத்தேர்தலில் திமுகவுக்கு நேரடியான சவால்விடுக்கக் கூடிய அதிமுக களத்தில் இல்லை. அதிமுக கூட்டணி கட்சிகள் எதுவும் களம் காணாமல் புறக்கணித்துவிட்டன. பாமகவுக்கு எப்போதுமே இத்தொகுதியில் கணிசமான வாக்குகள் இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் உறுதி செய்துள்ளன. அண்ணா திமுகவின் வாக்குகள் 3-வது கட்சியான நாம் தமிழருக்கு மடை மாறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதிமுகவின் வாக்குகளும் கூட திமுகவுக்கே போயிருப்பதால் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் முதல் முறையாக வென்ற கட்சியே மீண்டும் வென்று சரித்திரம் படைத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+