ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா?
சென்னை: வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்காக, 100% வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு சென்னையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. பெரிய பலூன்கள் முதல் ஃபிளாஷ் மாப்கள் வரை பல்வேறு புதிய வழிகளில் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.
சென்னையில் ரிப்பன் கட்டடம், எழிலகம், அண்ணா சாலை, கோயம்பேடு மேம்பாலம் போன்ற முக்கிய இடங்களில், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் பிரம்மாண்டமான பலூன்கள் வைக்கப்பட்டுள்ளன. "தேர்தல் திருவிழா - தமிழகத்தின் பெருவிழா" என்ற முழக்கத்துடன் இவை வாக்காளர்களை பங்கேற்க அழைக்கின்றன.

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், எல்இடி திரைகள் பொருத்தப்பட்ட வாகனங்கள், குப்பை அகற்றும் லாரிகள், அரசுப் பேருந்துகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு காணொலிகள் மற்றும் சின்னத்துடன் கூடிய விளம்பரங்கள், 100 மின்னணு விளம்பரப் பலகைகளிலும், 1000 பேருந்து நிறுத்தங்களிலும் ஒளிபரப்பப்படுகின்றன.
கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரவள்ளூர் காவல் நிலையம் அருகில், வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஒன்று நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டவர்கள் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து சான்றிதழ்களையும் பெற்றனர். மார்ச் 28 அன்று, ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ஃபிளாஷ் மாப் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
பெரம்பூர் மற்றும் ஆர்.கே. நகர் தொகுதிகளில், கரகாட்டம், கானா, கும்மி போன்ற நாட்டுப்புறக் கலைகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், மெரினா காமராஜர் சாலையில், சனிக்கிழமை அன்று 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில், தொண்டியாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தில் பிரெயில் முறையில் வாக்களிப்பது பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
அத்துடன், சாந்தோம் மையத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத வாக்காளர்களுக்கு சைகை மொழி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெரம்பூர் தொகுதியின் வியாசர்பாடியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், 12D படிவம் மற்றும் வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் முறை குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.
மார்ச் 31 அன்று, விருகம்பாக்கம் தொகுதியின் கோயம்பேடு சந்தைப் பகுதியில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்களிப்பு நாளில் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும், கடைகளில் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.
-
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications