புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை: புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி சாதாரணத் தேர்தல், 2021-க்கான வாக்காளர் பட்டியல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர், திருநெல்வேலி, மற்றும் தென்காசி மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களுக்காக 19.03.2021 அன்று வெளியிடப்பட்ட தொடர்புடைய சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல்களில் உள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பட்டியல் வார்டு வாரியாக தயாரித்து அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால் 31.08.2021 அன்று வெளியிடப்பட்டன.

மேற்கண்ட வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளமான "https://tnsec.tn.nic.in" -யில் வெளியிட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்ற விவரங்களை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
19.3.2021 அன்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்கள் தங்களது பெயர்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கான பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும் எனில், முதலில் அவர்கள் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்களை சேர்க்க வேண்டும். அதற்கு அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடம் சென்று அவர்களது பெயர்களை சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

இவ்வாறு புதிதாகச் சேர்க்கப்படும் வாக்காளர்களின் பெயர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தொடர்புடைய தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னரே அவரது பெயர், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கிராம ஊராட்சி வார்டு வாரியான வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய ஊரக உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் உரியவாறு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதால், தொடர்புடைய சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலரை தொடர்பு கொண்டு பெயர் சேர்க்கை, முகவரி மாற்றம் போன்ற தேவையான திருத்தங்களை செய் கொள்ளுமாறு வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் " இவ்வாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய ஆணையம் கூறியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications