தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! புது அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு கடந்த தேர்தலை விட வெகுவாக குறைந்துள்ளதாக தேர்தல் ஆணையத்தின் லேட்டஸ்ட் தகவல் தெரிவிக்கிறது. நேற்று நடந்த லோக்சபா தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் சேர்த்து மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2019 தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 3% வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

முன்னதாக நேற்று இரவு 7 மணி நிலவரம் என தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 72.09% எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையை பொறுத்தவரை 68% வாக்கு பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குப்பதிவு விவரம் குறித்த பட்டியலில், தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு 69.46 % எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் இப்போது இறுதி பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் மாநிலத்தில் 69.46% வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தருமபுரி லோக்சபா தொகுதியில் 81.48 % வாக்குப்பதிவும், தமிழ்நாட்டிலேயே குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட சென்னையில் 60.3% வாக்குப்பதிவு, தென் சென்னையில் 54.27%, மத்திய சென்னையில் 53.91% வாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி 79.25%, பெரம்பலூரில் 77.37%, சிதம்பரம் 75.32% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. நாமக்கல்லில் 78.16%, கரூரில் 78.61%, அரக்கோணத்தில் 74.08% வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆரணி 75.65%, சேலம் 78.13%, விழுப்புரம் 76.47%, திருவண்ணாமலை 73.88%, வேலூர் 73.42%, காஞ்சிபுரம் 71.55%, திருப்பூர் 70.58%, திருவள்ளூர் 68.31%, தேனி 69.87%, மயிலாடுதுறை 70.06%, ஈரோடு 70.54% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
காஞ்சிபுரம் 71.55%, கிருஷ்ணகிரி 71.31%, கடலூர் 72.28%, விருதுநகர் 70.17%, பொள்ளாச்சியில் 70.70% வாக்குப்பதிவு. திண்டுக்கல் 70.99%, திருச்சி 67.45%, கோவை 64.81%, நீலகிரி 70.93%, தென்காசி 67.55%, சிவகங்கை 63.94% வாக்குப்பதிவு. ராமநாதபுரம் 68.18%, தூத்துக்குடி 59.96%, நெல்லை 64.10%, கன்னியாகுமரி 65.46%, தஞ்சை 68.18% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது.
7 மணியளவில் வெளியிட்ட வாக்குப்பதிவு விவரம், வாக்குச்சாவடி முகவர்கள் அளித்த தகவலின்படி வெளியிடப்பட்ட தோராயமான பட்டியல் என்றும், அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு நிலவரம், நள்ளிரவில் வெளியிடப்பட்டது தான் என்றும் தெரிகிறது.
தமிழ்நாட்டில் நேற்று வாக்குப்பதிவு முடந்த நிலையில், சுமார் 24 மணி நேரம் கழித்து இப்போது தான் இறுதி வாக்குப்பதிவு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய விவரங்களின்படி தமிழ்நாட்டில் கடைசி ஐந்து தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் விவரம் வருமாறு:
2014 லோக்சபா தேர்தல் - 73.74%
2016 சட்டசபை தேர்தல் - 74.81%
2019 லோக்சபா தேர்தல் - 72.44%
2021 சட்டசபை தேர்தல் - 73.63%
2024 லோக்சபா தேர்தல் - 69.46%
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications